twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மராத்தி நடிகை சுமிதா தல்வாக்கர் புற்றுநோயால் மரணம்: பிரதமர் மோடி இரங்கல்

    By Mayura Akilan
    |

    மும்பை: பிரபல மராத்திய நடிகை சுமிதா தல்வாக்கர் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58. புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். நடிகையின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மராத்திய திரைப்பட நடிகையும், தயாரிப்பாளருமான சுமிதா தல்வாக்கர் கடந்த சில மாதங்களாக கர்ப்பப்பை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக அவர் மும்பை ஜஸ்லோக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், புதன்கிழமை மதியம் 2.30 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. சுமிதா தல்வாக்கர் மரணம் அடைந்ததை ஜஸ்லோக் மருத்துவமனை டாக்டர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

    Veteran Marathi actress Smita Talwalkar passed away

    செய்திவாசிப்பாளர் டூ நடிகை

    மரணம் அடைந்த நடிகை சுமிதா தல்வாக்கர், ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார். அங்கு 17 ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர், சினிமா வாய்ப்பு கிடைத்து திரையுலகில் தடம் பதித்தார். அவரது நடிப்பில் வெளியான ''து சவுபாக்யவதி ஹோ', 'கத்பாத் கோத்தாலா' ஆகிய திரைப்படங்கள் என்றும் நினைவில் நிற்பவை.

    திரைப்பட தயாரிப்பாளர்

    ஆரம்ப காலத்தில் ஒரு நடிகையாக திரையுலகில் கால் பதித்த சுமிதா தல்வாக்கர், 1989-ம் ஆண்டு வெளியான 'கலத் நகலத்' திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவருக்கு 1991-ம் ஆண்டு தேசிய விருது வழங்கப்பட்டது. அதன்பின், 1993-ம் ஆண்டில் 'சாவத் மஷி லத்கி' என்ற நகைச்சுவை படத்தை அவர் இயக்கியதன் மூலம், ஒரு இயக்குனராகவும் பிரவேசம் எடுத்தார்.

    திரைப்பட இயக்குநர்

    சுமிதா தல்வாக்கர் இதுவரை 6 திரைப்படங்கள் இயக்கி உள்ளார். தவிர, 'பெஷ்வாய்' 'அவந்திகா', 'உஞ்ச் மாஷா ஷோக்கா' உள்பட 25 தொலைக்காட்சி தொடர்களையும் அவர் தயாரித்து உள்ளார்.

    ராஜ்தாக்கரே அஞ்சலி

    நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, மறைந்த நடிகை சுமிதா தல்வாக்கரின் இல்லத்துக்கு சென்று, அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும், பல்வேறு அரசியல் கட்சியினரும், திரையுலகினரும் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

    மோடி இரங்கல்

    நடிகை சுமிதா தல்வாக்கரின் மரணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, இரங்கல் தெரிவித்துள்ளார்.''சுமிதா தல்வாக்கரின் மறைவு மராத்திய திரைப்பட துறைக்கு பேரிழப்பு. திரைப்பட துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைகூரத்தக்கவை. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என்று தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

    அமைச்சர் இரங்கல்

    சுமிதா தல்வாக்கர் மறைவுக்கு தகவல் ஒலிப்பரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகரும் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் வலைதளத்தில், திறமைவாய்ந்த நடிகையும், தயாரிப்பாளரும், இயக்குனருமான சுமிதா தல்வாக்கர் என்றைக்கும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்று வாழ்கிறார். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.

    Read more about: passed away narendra modi
    English summary
    Veteran Marathi actress Smita Talwalkar passed away Wednesday morning in Mumbai, said a spokesperson of the hospital where she was being treated for ovarian cancer. She was 58.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X