கொரோனா மருத்துவமனையில் பிரபல நடிகர் திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி.. பிரபலங்கள் இரங்கல்!

By

சென்னை: கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல நடிகர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனா உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இருந்தும் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும்

உலகம் முழுவதும்

இந்த உயிர்கொள்ளி வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. உலகளவில் 2.91 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு எற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9.27 லட்சத்தை தாண்டி உள்ளது.

ஜெனிலியா

ஜெனிலியா

கொரோனா தடுப்பூசி வரும் மார்ச் மாதத்திற்குள் தயாராகி விடும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த கொரோனா வைரஸுக்கு பிரபலங்கள் பலர், பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், நடிகைகள் நிக்கி கல்ராணி, ஜெனிலியா, நடிகர் விஷால், இயக்குனர் ராஜமவுலி உள்பட பலர் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர்.

நடிகர் அஜித் தாஸ்

நடிகர் அஜித் தாஸ்

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் அஜித் தாஸுக்கு கொரோனா பாதித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கொரோனாவுக்கான தனியார் மருத்துவமனையில் கடந்த 1 ஆம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவந்த அவர் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 71.

ஒடிசா முதலமைச்சர்

ஒடிசா முதலமைச்சர்

அவர் கொரோனாவால்தான் உயிரிழந்தாரா என்பது பற்றி மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கவில்லை. அவர் மறைவை அடுத்து ஒடிசா முதலமைச்சர், நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பிரதாப் சாரங்கி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஏராளமான ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

Master Vs Soorarai Pottru, Diwali க்கு மோத போகிறது | Surya, Thalapathy Vijay
ஸ்கூல் ஆஃப் டிராமா

ஸ்கூல் ஆஃப் டிராமா

மறைந்த அஜித் தாஸ், நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் நடிப்பு பயின்றவர். சுமார் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பல படங்களை தயாரித்தும் உள்ளார். கடைசியாக அவர் இஷ்க் புனி தாரே என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது. மறைந்த அஜித் தாஸூக்கு மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X