மேடையில் மயங்கி விழுந்து பிரபல பாடகர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம் !

ஆலப்புழா : பிரபல பின்னணி பாடகர், பாடல் பாடிக்கொண்டிருந்த போதே மேடையில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். அவருக்கு வயது 78.

பிரபல மலையாளப் பின்னணிப் பாடகர் எடவா பஷீர் மலையாளத்தில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் ஆழப்புழைவில் உள்ள பத்திரப்பள்ளியில் நேற்றிரவு நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். ப்ளூ டைமண்ட்ஸ் என்ற இசைக்குழுவின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்துக்கான இசை நிகழ்ச்சியில், கே.ஜே.யேசுதாஸ் பாடிய இந்தி பாடல் ஒன்றை எடவா பஷீர் மேடையில் உச்ச சாயலில் அழகாக பாடிக்கொண்டு இருந்தார்.

Veteran playback singer Edava Basheer has passed away.

அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பஷிர் மாராட்டைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து, எடவர் பஷீரின் உடல் அவருடைய சொந்த ஊரான கொல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு இன்று இறுதி சடங்கு நடைபெற உள்ளது. அவருக்கு உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த பஷீர், கேரள இசைக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவராகப் பணியாற்றி உள்ளார். அவரது மறைவுக்குத் திரைத்துறையினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நம்ப முடியவில்லை. மிகவும் வருத்தமாக உள்ளது என்று சோஷியல் மீடியாவில் பலர் தங்கள் வருத்தத்தை பகிர்ந்து வருகின்றனர் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X