twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'பொன்மானைத் தேடி...'- தீர்ந்து போகாத இசை, மறக்க முடியாத 'மலேசியா'வின் குரல்!

    By
    |

    சென்னை: தமிழ் சினிமா தந்திருக்கிற ஏராளமான பாடகர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை!

    அவர்களின் குரல்களில் ஏதோ ஒரு காந்தம் இருந்திருக்கிறது. நம்மை இழுத்திருக்கிறது. அப்படியான மாயக் குரல்களில், ஒன்று மலேசியா வாசுதேவனுடையது.

    தமிழை மிகச்சரியாக உச்சரித்த பாடகர்களில், குறிப்பிடத்தக்கவர் அவர். தினுசு தினுசான பாடல்களை பாடியிருக்கும் மலேசியா, எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உட்பட பல்வேறு இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றியவர்.

    வாய்ப்புத் தேடினார்

    வாய்ப்புத் தேடினார்

    யாராவது ஒரு கலைஞனின் தாமதத்தால், பிரச்னையால், யாரோ ஒருவருக்கு வாய்ப்புக் கிடைத்து, அந்த கலைஞன் உச்சத்துக்குச் சென்ற கதைகள், கோடம்பாக்கப் புத்தகத்தில் அதிகம். அப்படித்தான் மலேசியா வாசுதேவனுக்கும்! அப்போது வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தார் வாசுதேவன். சில படங்களில் பாடியிருந்தாலும் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை.

    டிராக் பாட அழைப்பு

    டிராக் பாட அழைப்பு

    '16 வயதினிலே' படத்துக்கான பாடல் பதிவு. பாடல் ரெடி. எஸ்.பி.பி பாடவேண்டும். அவருக்கு உடல் நலமில்லை. என்ன செய்யலாம் என்று நினைத்தபோது, வாசுதேவனை, டிராக் பாட அழைத்தார் இளையராஜா. நல்லா பாடினா, படத்தில் இடம்பெறும் என்றார். அந்தப் பாடல்கள், 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு...' மற்றும் 'செவ்வந்தி பூ முடிஞ்ச சின்னக்கா...' இரண்டும் அசத்த, தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளை கொடுத்தார் ராஜா.

    பொன்மனைத் தேடி

    பொன்மனைத் தேடி

    மெலடி, குத்து, சோகம் என விதவிதமான பாடல்களில் அசத்தியவர் மலேசியா. சில படங்களில் தனது குரல்களை மாற்றியும் பாடியிருக்கிறார். 'பொன்மனைத் தேடி நானும் பூவோடு வந்தேன்' (எங்க ஊர் ராசாத்தி) என்று 80 களின் இளைஞர்களை சோகத்தில் ஆழ்த்தியவர், கிழக்கே போகும் ரயிலில், 'கோயில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ' என்று நெகிழ வைத்திருப்பார்.

    கோடை கால காற்றே

    கோடை கால காற்றே

    பன்னீர் புஷ்பங்கள் படத்தில், கோடை கால காற்றே என பேஸ் வாய்ஸில் உருவ வைத்திருப்பார். ஒரு பக்கம் 'காதல் வைபோகமே' என்ற மனதை வருடினால், மறுபக்கம், வெத்தலையை போட்டேன்டி என்று துள்ள வைப்பார். கமல், ரஜினி, சிவாஜி ஆகியோருக்கு அவரவர் குரலில் பாடுவது போலவே பல பாடியிருக்கிறார் மலேசியா.

    பேர் வச்சாலும்

    பேர் வச்சாலும்

    என்னம்மா கண்ணு சவுக்கியமா? (மிஸ்டர் பாரத்) என்று ரஜினிக்கு வாய்ஸை ஏற்றினால், கமலுக்கு 'பேர் வச்சாலும் வைக்காம போனாலும் (மைக்கேல் மதனகாமராஜன்) என்று வேற லெவலில் பாடியிருப்பார். அவர் அசத்திய, மிரட்டிய பாடல்களுக்கு கணக்கில்லை. நடிப்பிலும் வில்லனாக, குணசித்திர நடிகராக பல கேரக்டர்களில் வாழ்ந்த மலேசியாவுக்கு இன்று நினைவு நாள். அவர் இல்லையென்றாலும் அவர் குரல் எப்போதும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.

    English summary
    Veteran singer M. Vasudevan's death anniversary today
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X