நடிகரும், கவிஞருமான அமரசிகாமணி காலமானார்

சென்னை : நடிகரும், கவிஞருமான அமரசிகாமணி சென்னையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் காலமானார். இந்த தகவலை அவரது மகன் பார்த்திப அமரசிகாமணி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

டிவி சீரியல்கள், சினிமாக்கள் ஆகியவற்றில் நடித்துள்ள அமரசிகாமணிக்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 70. கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அமரசிகாமணி, சிகிச்சை பலனின்றி இருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

Veteran Tamil actor Amarasigamani passes away

அவர் மனைவி ஹியாமளா தேவி, 3 மகன்கள் மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி தனது கவிதைகளுக்காகவும் பல விருதுகளை பெற்றுள்ளார் அமரசிகாமணி. இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளது.

ரஜினி நடித்த சிவாஜி, விஜயகாந்த் நடித்த ரமணா உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் அமரசிகாமணி நடித்துள்ளார். இது தவிர சொந்தம், உறவுகள், பொன்னூஞ்சல் உள்ளிட்ட புகழ்பெற்ற பல டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

அமரசிகாமணியின் மறைவிற்கு திரையுலக மற்றும் சின்னத்திரையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரின் இறுதிச்சடங்குகள் நேற்று மாலை சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X