twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நயனதாரா நடித்த ஸ்ரீராமராஜ்யம் பட இயக்குநர் பாபு காலமானார்

    By Mayura Akilan
    |

    சென்னை: பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் பாபு (வயது 81) மாரடைப்பால் காலமானார் அவருக்கு வயது 80.

    1933-ம் ஆண்டு பிறந்த பாபுவின் இயற்பெயர் சத்திராஜு லக்ஷ்மி நாராயணா. திரையுலகில் இவரை அனைவரும் பாபு என்று அழைத்தனர். இவருக்கு பானுமதி என்ற மகளும், வேணுகோபால், வெங்கட்ரமணன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

    Veteran Telugu film director, artist Bapu passes away

    என்.டி.ராமாராவ், சிரஞ்சீவி, நாகேஷ்வர ராவ், அனில்கபூர், ஸ்ரீகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களை இயக்கிய பாபு, தமிழில் 'நீதி தேவன் மயங்குகிறான்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

    பாலகிருஷ்ணா, நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'ஸ்ரீராம ராஜ்யம்'உட்பட 51 படங்களை அவர் இயக்கியுள்ளார்.

    2013-ம் ஆண்டில் பத்மஸ்ரீவிருது, ஆந்திர பல்கலைக்கழகம் வழங்கிய கலா பிரபூர்ணா விருது உட்பட பல விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

    உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு தெலுங்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஏராளமான நடிகர், நடிகையர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    பாபுவின் மறைவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    English summary
    Renowned Telugu filmmaker Bapu, also an acclaimed artist, painter, cartoonist and illustrator, passed away in Chennai on Sunday following a brief illness.He was 80. Bapu, whose real name was Sattiraju Lakshminarayana, had been admitted to a private hospital in Chennai a few days ago and he passed away this evening due to a cardiology-related ailment, hospital sources said.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X