பிரபல தயாரிப்பாளர் திடீர் உயிரிழப்பு..சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

சென்னை : தெலுங்கு தயாரிப்பாளர் கத்ரகடா முராரி வயது மூப்பு காரணமாக காலமானார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 78.

அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தயாரிப்பாளர் கத்ரகடா முராரி

தயாரிப்பாளர் கத்ரகடா முராரி

தமிழ் , தெலுங்கு திரை உலகின் பழம்பெரும் தயாரிப்பாளர் கத்ரகடா முராரி. இவர் யுவசித்ரா ஆர்ட்ஸ் என்ற பேனரில் படங்களை தயாரித்துள்ளார். கதையிலும் இசையிலும் நல்ல ரசனை கொண்ட தயாரிப்பாளராக அறியப்பட்ட கத்ரகடா முராரி தயாரித்த அனைத்து படங்களின் இசை மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருந்ததால்,பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்றன.

முன்னணி இயக்குநர்கள்

முன்னணி இயக்குநர்கள்

கே விஸ்வநாத், தாசரி நாராயண ராவ், கே ராகவேந்திர ராவ், ஜந்தியாலா போன்ற சிறந்த இயக்குனர்களை வைத்து திரைப்படங்களை உருவாக்கியதால், இவர் தயாரித்த படங்கள் தோல்வியைத் தழுவாமல் வெற்றி பெற்றன. கத்ரகடா முராரி ஒன்பது படங்களை மட்டுமே தயாரித்துள்ளார். அந்த ஒன்பது படங்களும், இன்று வரை கிளாசிக் படங்களாகக் கருதப்படுகின்றன.

பல ஹிட் படங்கள்

பல ஹிட் படங்கள்

சீதாமலட்சுமி, கொரிண்டாக்கு, திரிசூலம், சீதாராம கல்யாணம், ஜானகி ராமுடு, ஸ்ரீனிவாச கல்யாணம், ஜெய் காந்தலு, நாரி நரி நடுமா முராரி, அபிமன்யுடு ஆகிய படங்களை யுவசித்ரா ஆர்ட்ஸ் என்ற பெயரில் தயாரித்துள்ளார். இவர் தயாரித்த படங்கள் அனைத்துக்கும் கே.வி.மகாதேவன் மட்டுமே இசையமைத்திருந்தார். மேலும், சலனசித்ரா நிர்மதலா சரித்ரா என்ற தலைப்பில் தெலுங்கு தயாரிப்பாளர்களைப் பற்றிய புத்தகத்தை வெளியிடுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

கத்ரகடா முராரி காலமானார்

கத்ரகடா முராரி காலமானார்

இந்நிலையில், பழம்பெரும் நடிகர் தயாரிப்பாளர் கத்ரகடா முராரி வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பிற்பகலுக்கு மேல் இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளது. அவரின் மறைவுக்கு நடிகர், நடிகையர்கள்,தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என திரைப்பிரபலங்கள் பலரும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பழம்பெரும் தயாரிப்பாளரின் மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X