2014 பிளாஷ்பேக்: தமிழ் சினிமாவிற்கு வந்த மயிலு... ஜோதிகா... கவுதமி

By Mayura Akilan

சென்னை: தமிழ் சினிமாவில் இளம் வயதில் கதாநாயகனாக அறிமுகமாகும் நடிகர்கள் தாத்தா ஆகும் வரை கதாநாயகர்களாகவே நடித்துக்கொண்டிருப்பார்கள்.

ஆனால் அவர்களுக்கு மகளாக நடித்த நாயகிகள் ஜோடியாகி, பின்னர் அம்மாவாக நடித்து ரிட்டயர் ஆகிவிடுவார்கள்.

தமிழ் சினிமாவின் கனவு கன்னிகளாக திகழ்ந்த நாயகிகள் பிஸியாக இருக்கும் போதே, திருமணம், குழந்தை குட்டிகள் என்று செட்டில் ஆகிவிடுவார்கள்.

அதுபோன்று செட்டில் ஆன நாயகிகள் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னர் மீண்டும் கோலிவுட்டில் அடிஎடுத்து வைத்துள்ளனர். நீண்ட வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த நதியா, ஸ்ரீதேவி, மனீஷா கொய்ராலா, துளசி, மதுபாலா போன்றவர்கள் ஏற்கனவே நடிக்க வந்து விட்டார்கள்.

2014ஆம் ஆண்டு ஏராளமான நாயகிகள் ரீ என்ட்ரி ஆகியுள்ளனர். அவர்களைப் பற்றி சற்றே திரும்பி பார்ப்போம்.

ஸ்ரீ தேவி

ஸ்ரீ தேவி

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீ தேவி பதினாறு வயதினிலே படத்தின் மூலம் மயிலாக அன்றைய இளசுகளின் மனதில் நுழைந்தார். பாலிவுட் உலகம் சென்று கொடி கட்டி பறந்த ஸ்ரீதேவி போனிகபூரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

தமிழ் சினிமாவில் மயிலு

தமிழ் சினிமாவில் மயிலு

குடும்பம், குழந்தைகள் என்று செட்டில் ஆன மயிலு, ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்' என்ற இந்திப் படத்தில் நடித்தார். தொடர்ந்து விளம்பர படங்கள் மூலம் வீட்டுக்குள் வந்தார். தற்போது சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடிக்கும் தமிழ் படத்தில் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

கவுதமி

கவுதமி

குரு சிஷ்யனில் அறிமுகமான கவுதமி 90 களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார். திருமணத்திற்குப் பின்னர் சினிமாவை விட்டு விலகிய கவுதமி, பின்னர் தமிழகம் திரும்பினார். டிவி சீரியல்களிலும்,டாக் ஷோ நடத்தவும் சின்னத்திரையில் நுழைந்த கவுதமி தற்போது கமல்ஹாசனுடன் ‘பாபநாசம்' படத்தில் நடித்து வருகிறார்.

ஜோதிகா

ஜோதிகா

சூர்யாவைக் காதலித்து திருமணம் செய்த பிறகு விளம்பரப்படங்களில மட்டுமே நடித்து வந்தார் ஜோதிகா.

சினிமாவிற்கு 7 வருடங்களாக இடைவெளி விட்டிருந்த ஜோதிகா, ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ?' என்ற மலையாள ரீமேக் படத்தில் நடிக்கிறார்.

அபிராமி

அபிராமி

தமிழ், மலையாள படங்களில் நடித்த அபிராமி கமலுடன் விருமாண்டியில் நடித்து பிரபலமானார். அமெரிக்காவிற்கு படிக்க போன அபிராமி டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக தமிழகத்திற்கு திரும்பினார். இப்போது ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தில் நடிக்கிறார்.

ஸ்ரேயா ரெட்டி

ஸ்ரேயா ரெட்டி

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து ‘திமிரு', ‘வெயில்', ‘காஞ்சீவரம்' படங்களில் நடித்தவர் ஸ்ரேயா ரெட்டி. விஷாலின் அண்ணனை திருமணம் செய்து கொண்டு செட்டிலானவர் தற்போது ‘அண்டாவ காணோம்' படத்தில் நடித்து வருகிறார்.

காதல் மன்னன் மனு

காதல் மன்னன் மனு

அஜீத்துடன் ‘காதல் மன்னன்' படத்தில் நடித்த பிறகு சிங்கப்பூரில் செட்டிலான மானு, ‘என்ன சத்தம் இந்த நேரம்' படத்தின் மூலம் திரும்ப வந்திருக்கிறார்

அழகு அமலா

அழகு அமலா

எண்பதுகளில் அறிமுகமாகி தொண்ணூறுகளில் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர் அமலா. பிஸியாக நடித்த போதே தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனவர் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் டிவி சீரியல் மூலம் நடிக்க வந்துள்ளார்.

தேவயானி

தேவயானி

கணவர் ராஜகுமாரன் இயக்கிய ‘திருமதி தமிழ்' ரிலீசான பிறகு மற்றவர்கள் படத்தில் நடிக்காத தேவயானி, பள்ளி ஆசிரியை வேலை பார்க்கிறார் தற்போது ‘சகாப்தம்' படத்தில் நடிக்கிறார்.

லட்சுமி

லட்சுமி

சிறிய இடைவெளிக்குப் பிறகு லட்சுமி, ‘மூணே மூணு வார்த்தை' படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் நடித்து வருகிறார்.

நிரோஷா

நிரோஷா

மணிரத்னம் படமான அக்னி நட்சத்திரம் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நிரோஷா. அக்கா ராதிகாவைப் போல இவரால் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை. எனவே ராடான் டிவி சீரியலில் நடிக்கத் தொடங்கினார். சிலகாலம் மீடியாவின் கண்களில் படாமல் ஒதுங்கியிருந்த நிரோஷா மீண்டும் சின்னப்பாப்பா பெரிய பாப்பா சீரியல் மூலம் ரீ என்ட்ரி ஆகியுள்ளார். தமிழில் ‘கககபோ' படம் மூலம் மீண்டும் சினிமாவிற்கு வந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X