சொத்துக்காக சீரியல் நடிகை அடித்துக்கொலை...உடலை ஆற்றில் வீசிய கொடூர மகன் !
மும்பை : பிரபல தொலைக்காட்சி நடிகை சொத்துக்காக மகனால் அடித்து கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூத்த நடிகையான வீணா கபூர், மிட்டர் பியாரே நு ஹால் முரீடன் டா கெஹ்னா, டல்: தி கேங், பந்தன் பெரோன் கே ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மேலும், இவர், பிரிட்ஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார்.

நடிகை வீணா கபூர்
74 வயதான வீணா கபூர், மும்பையில் ஜூஹு பகுதியில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இவரை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணவில்லை என, வீணா குடியிருக்கும் சொசைட்டியின் பாதுகாவலர் ஜூஹூ காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து போலீசார், அந்த அப்பாட்மெண்டின் சிசிடிவி காட்சியை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

தாயைக்கொன்ற மகன்
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிக்கிய வீணா கபூரின் மகன், சொத்துக்காக கொலை செய்ததை ஒத்துக்கொண்டார். தனது தாயின் பெயரில் இருக்கும் 12 கோடி மதிப்புடைய வீட்டை விற்று பணம் தரும்படி கூறியதாகவும். இதற்கு தாயார் மறுப்பு தெரிவித்ததால், அவருக்கும் எனக்கு வாக்குவாதம் முற்றியதாகவும். இதனால், ஆத்திரத்தில் பேஸ்பால் மட்டையால் அவரை பலமுறை தாக்கினேன் இதனால் அவர் உயிரிழந்து விட்டார் என்றார்.

மூட்டைகட்டிஆற்றில் வீசினேன்
இதையடுத்து, அவரது உடலை மும்பையில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்திற்கு அருகில் உள்ள மாதேரன் ஆற்றில் மூட்டை கட்டி வீசியதாக கூறினார். இதையடுத்து, நடிகையின் மகன் சச்சின் கபூர் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த வேலைக்காரன் சோட்டு என்பவரை போலீசார் சைது செய்துள்ளனர்.

என்னால் நம்பவே முடியவில்லை
நடிகை வாணி கபூரின் மறைவு பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில், அவரது தோழி நீலு கோஹ்லி இரங்கல் தெரிவித்துள்ளார். இதில், அவள் இந்த வீட்டிற்காக எவ்வளவோ உழைத்திருக்கிறாள். ஆனால் இறுதியில் அவளுக்கு மரணம் பரிசாக கிடைத்து இருக்கிறது. இந்தச் செய்தியை கேட்டு என் மனம் குமுறுகிறது. என்னால் சாப்பிட முடியவில்லை. என்னால் சிந்திக்க முடியவில்லை. எனக்கு நெருக்கமான ஒருவருக்கு இப்படி நடந்தது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. இது என்ன? இது மிகவும் அநியாயம் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார் நீலு கோஹ்லி.


Click it and Unblock the Notifications











