வேலையில்லா பட்டதாரி வரிசையில் வருகிறது வெத்துவேட்டு! கோலிவுட்டில் புது டிரெண்ட் ஆரம்பம்

By Veera Kumar

சென்னை: ஹரிஷ் மற்றும் மாளவிகா மேனன் ஜோடியாக நடிக்க தயாராகியுள்ள புதிய படம், 'வெத்து வேட்டு.' பத்தாம் வகுப்புவரை படித்த கதாநாயகன், இன்ஜினியரிங் படித்த கதாநாயகியை கட்டாய திருமணம் செய்வதுதான் கதையாம். வேலையில்லா பட்டதாரி பட நாயகனைப்போல பாதி படம்வரை வெட்டியாக சுற்றுபவர்களை மையப்படுத்தி கதைகள் அதிகரிக்க தொடங்கியுள்ளதற்கு இது ஒரு உதாரணம்.

படத்தை எழுதி இயக்கிய, எஸ்.மணிபாரதி கூறியதாவது:

வெத்து வேட்டு படத்தில் ஹரிஷ்-மாளவிகா மேனனுடன் இளவரசு, 'ஆடுகளம்' நரேன், தென்னவன், கஞ்சா கருப்பு, பிளாக் பாண்டி, வெங்கல்ராவ், போண்டாமணி, கிரேன் மனோகர், ஸ்ரீரஞ்சனி, மீராகிருஷ்ணன், பருத்திவீரன் சுஜாதா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

யுக பாரதி பாடல்

யுக பாரதி பாடல்

ஐந்து பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. தாஜ்நூர் இசையில், கவிஞர் யுகபாரதி பாடல்களை எழுதியிருக்கிறார். தினா நடனம் அமைத்து இருக்கிறார். ஒவ்வொரு பாடலும் நாதஸ்வரம், புல்லாங்குழல், ஆர்மோனியம், வயலின் ஆகிய இசைக்கருவிகளை முதன்மையாக கொண்டு ஆரம்பிப்பது சிறப்பு.

கிராமத்து பின்னணி

கிராமத்து பின்னணி

முழுக்க முழுக்க கிராமிய பின்னணியில் மண்வாசனையுடன் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. காதல் வரையறைக்கு அப்பாற்பட்டது என்ற கருத்து சொல்லப்பட்டுள்ளது. கதைப்படி, கதாநாயகன் ஹரிஷ், ஒரு வெத்து வேட்டு. பத்தாம் வகுப்புவரை படித்தவன். கதாநாயகி மாளவிகா மேனன் இன்ஜினீயரிங் படித்தவர்.

கட்டாய திருமணம்

கட்டாய திருமணம்

மாளவிகாவை, ஹரிஷ் ஒருதலையாக காதலிக்கிறார். ஒரு சூழ்நிலையில், இருவருக்கும் கட்டாய திருமணம் நடக்கிறது. திருமணத்துக்குப்பின், அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? என்பதே கதை. இவ்வாறு மணிபாரதி கூறியுள்ளார். எஸ்.குமார், ஏ.ராமசாமி, டி.சரவண மாணிக்கம், ஆர்.மூர்த்தி ஆகிய 4 பேரும் படத்தை தயாரிக்கிறார்கள்.

வி.ஐ.பி வெற்றியால் ஊக்கம்

வி.ஐ.பி வெற்றியால் ஊக்கம்

வேலையில்லா பட்டதாரியில் 'தெண்டச்சோறு' வசைமொழியுடன் வலம் வரும் கேரக்டரில் தனுஷ் நடித்திருந்தார். அந்த படம் தயாரிப்பாளரை ஏமாற்றாத நிலையில், பட தலைப்பிலேயே கதையை வைத்துள்ள வெத்துவேட்டும் அந்த பட்டியலில் இணையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வேலையில்லாமல் நாட்டில் பலரும் கஷ்டத்தை அனுபவித்து வருவதால், இதுபோன்ற படங்கள் அவர்களின் ஆதரவை பெறும் என்பது கோலிவுட் படைப்பாளிகளின் மன ஓட்டம் போலிருக்கிறது.

அமலா பால் இல்லைன்னா ஆவின் பால்

அமலா பால் இல்லைன்னா ஆவின் பால்

"அது சரி.. தெண்டச்சோறு, வெத்துவேட்டுக்கெல்லாம் அமலாபால், மாளவிகா மேனன் மாதிரி பொண்ணுங்க அமையுது, ஒழுங்கா வேலைக்கு போற நம்மளுக்குதான் ஒன்னும் அமைவதில்லை" என்று பலரும் பொறுமுவது காதில் கேட்கிறது. விடுங்க பாஸ்.. அமலா பால் இல்லைன்னா ஆவின் பால். திரிஷா இல்லைன்னா நயன்தாரா அப்படீன்னு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X