twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘நீங்க நினைச்சா மூடுவீங்க, நினைச்சா திறப்பீங்களா’.. அப்போதே ‘டாஸ்மாக்’ பற்றி பேசிய கே.பி.!

    இயக்குநர் சிகரம் பாலசந்தரின் 88வது பிறந்தநாள் இன்று.

    |

    Recommended Video

    அப்போதே டாஸ்மாக் பற்றி பேசிய இயக்குநர் பாலசந்தர்- வீடியோ

    சென்னை: பாலசந்தர் படங்கள் என்றாலே சட்டென நம் நினைவிற்கு வருவது அவரது பெண் கதாபாத்திரங்களும், உறவுச் சிக்கல்களும் தான். மற்ற இயக்குநர்களிடம் இருந்து பாலசந்தரை வித்தியாசப்படுத்தி காட்டியவர்கள் அவரது கதை மாந்தர்களே என்றால் மிகையில்லை.

    அந்தளவிற்கு பெண்மை, பெண் முன்னேற்றம், புரட்சி, உறவுகள், புரட்சி போன்றவை குறித்து பேசியவை பாலசந்தர் படங்கள். பெரும்பாலும் அவரது படங்கள் மறைமுக அரசியல் பேசியதாகவே இருந்தது.

    அதிலும் குறிப்பாக, அவரது படங்களில் பெண் கதாபாத்திரங்கள் எடுத்த புரட்சிகரமான சில முடிவுகள், இன்றைய பெண்களுக்கு முன்னோடியாக இருந்தது.

    இதோ அப்படியாக காலத்தால் அழியாத பாலசந்தரின் சில திரைக்காவியங்கள்:

    வறுமையின் நிறம் சிகப்பு:

    வேலைவாய்ப்பின்மையால் இளைஞர்கள் படும் அவதிகள் குறித்து விளக்கமாகப் பேசிய படம் வறுமையின் நிறம் சிகப்பு. இப்படத்தில் கமலின் கதாபாத்திரத்திற்கு இணையாக நாயகி ஸ்ரீதேவியின் கதாபாத்திரமும் உருவாக்கப்பட்டிருந்தது சிறப்பு. வேலையில்லா காரணத்தினால் இளைஞர்கள் சிலர் தவறான பாதைக்கு செல்வது பற்றி மட்டுமின்றி, தன் கையே தனக்குதவி என சுயதொழிலின் முக்கியத்துவம் பற்றியும் இப்படத்தில் பாலசந்தர் பேசியிருந்தார்.

    கமல் படம்:

    கமலின் திரைப்பட வாழ்க்கையில் முக்கிய இடம் பிடித்தது இப்படம். இதில் இடம்பெற்ற ஜனகராஜ் தோன்றிப் பேசும் மதுக்கடைக் காட்சி இன்றளவும் சமகால அரசியலை பேசுவதாக உள்ளது. சமீபத்தில் கூட இக்காட்சிகள் வாட்ஸ் அப்பில் வளைய வந்தது. இப்படத்தில் கமல்ஹாசன், ஜெமினி கணேசன், சீதா, மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

    சரிதா படம்:

    காதல், பெண்ணியம் மட்டுமின்றி பாலசந்தரின் பல படங்கள் அரசியல் களத்தைத் தொட்டுப் பார்த்ததுண்டு. அவற்றில் தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

    இளைஞர்கள் கதை:

    சமூகத்தின் கோரக்கரங்களால் தாக்கப்பட்டு, வெவ்வேறு பகுதியில் இருந்து ஒன்று சேர்ந்து சாக முடிவு செய்யும் இளைஞர்களைப் பற்றிய படம். ஆனால், அவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் வாழும் 100 நாட்களில் என்னென்ன மாதிரியான சம்பவங்கள் நடைபெறுகிறது என்பது தான் கதைக்களம். இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையைப் போலவே பாடல்களும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

    English summary
    Today is vetrean director K.Balachandar's 88th birthday. On this occasion here we can speak about the politics he spoke in his films.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X