Bad Girl Teaser: நீ ப்ளூ ஃபிலிம் பார்ப்பியா? வெற்றி மாறன் தயாரித்த பேட் கேர்ள் டீசர் எப்படி இருக்கு?
சென்னை: இயக்குநர் வெற்றி மாறன் படங்கள் இயக்குவது மட்டும் இல்லாமல், படங்களை தயாரிக்கவும் செய்கின்றார். இவரது, கிராஸ் ரூட்ஸ் புரொடக்ஷன் நிறுவனம், தயாரித்துள்ள படம் பேட் கேர்ள். இந்தப் படத்தினை இவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய, வர்ஷா பரத் இயக்கியுள்ளார். படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் டீசர் நேற்று ரிலீஸ் செய்யப்பட்டது. டீசர் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. டீசர் எப்படி உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றி மாறன் பேசும்போது, இந்தப் படத்தில் நான் மிகவும் தாமதமாகத்தான் வந்து இணைந்தேன். முதலில் இந்தப் படத்தினை அமேசான் தான் தயாரிப்பதாக இருந்தது. அதன் பின்னர் சில காரணங்களால், அவர்கள் வெளியேற, படத்தினை நாங்கள் தயாரிக்க முன் வந்தோம். படத்தின் கதை குறித்து எனக்கு முன்னரே தெரியும். மேலும் படம் ரோட்டட்டோம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்கின்றது என்பது, எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது எனக் கூறினார்.

இந்தப் படத்தில், நடிகை அஞ்சலி சிவராமன் முக்கியமான முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2 நிமிடங்கள் 2 நொடிகள் அளவிற்கு டீசர் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட இந்த டீசரை இதுவரை கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஒரு பெண்ணின் வாழ்க்கை குறித்து இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கால வாழ்க்கையில் இருந்து கதை தொடங்கி நகர்வதைப்போல படத்தை உருவாக்கியுள்ளார்கள் அல்லது படத்தில் கதாநாயகியின் பள்ளிக் கால வாழ்க்கைக்கும் முக்கியமான அங்கம் உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. டீசர் எப்படி இருக்கின்றது எனப் பார்க்கலாம்.

ப்ளூ ஃபிலிம்: இளம் பெண்ணுக்கு வருகின்ற காதல், காமம் ஆகிய உணர்வுகளின் கலவை, அதன் வெளிப்பாடு ஆகியவற்றினை எந்த காரணம் கொண்டும் தடுத்து வைக்காமலோ, அல்லது வெளிப்படுத்தாமலோ இருப்பதைக் காட்டிலும் அதனை வெளிப்படுத்தும் எண்ணத்தினை இயல்பாகக் கொண்ட ஒரு பெண். தோழிகளிடம் தனது மனதினைக் கவர்ந்த இளைஞர் குறித்தும் அவனது உருவ அமைப்பு குறித்தும், நடவடிக்கைகள் குறித்தும் அவனிடம் தன்னை கவர்ந்த விஷயங்கள் குறித்து பேசும் இளம் பெண்.
ஒரு இளைஞனிடம் நெருங்கிப் பழகும்போது, தனது மனதில் பட்டதைப் பேசுகின்றாள். குறிப்பாக நீ ப்ளூ ஃபிலிம் பார்ப்பியா என இளைஞனிடம் கேட்கின்றார். அதேபோல் உனக்கு எப்போது முதல் முறையாக பீரியட்ஸ் வந்தது என அந்த இளைஞன் கேட்கின்றான். மற்றவர்களை எல்லாம் விட நீதான் வேண்டும் என கூறுகின்றாள்.

கலர் டோன்: பள்ளியில் ஒரு இளைஞனுடன் முத்தம் கொடுத்துக் கொண்டு இருக்கும்போது மாட்டிக் கொள்கின்றாள். மகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத பூமர் பெற்றோர்கள். ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறும் அந்த பெண் தனது விருப்பம் போல தனது வாழ்க்கையை வாழுகின்றார். அப்போது அவரது வாழ்க்கையில் நடப்பது என்ன என்பதுதான் கதையாக இருக்குமோ என பலர் கூறுகின்றனர். டீசரில் உடலுறவுக் காட்சிகள் காண்பிக்கப்படுகின்றது. இதெல்லாம் இருந்தாலும் டீசரில் சில காட்சிகளில் காண்பிக்கப்படும் கலர் டோன், சில காட்சிகள் எல்லாம் கனவா? அல்லது ஃபிளாஷ் பேக்கா என்ற சந்தேகத்தினை எழுப்புகின்றது.

வரவேற்பு: ஏற்கனவே பெண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கடந்த சில ஆண்டுகளுக்குள்ளாக பல படங்கள் வந்துள்ளது. விமர்சன ரீதியாக அப்படங்கள் வெற்றியும் பெற்றுள்ளது. அந்த வகையில், இந்தப் படமும் விமர்சன ரீதியாக வெற்றிப் படமாக அமையும் என படக்குழு எதிர்பார்க்கின்றது. டீசர் உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications