சிம்பு ரசிகர்கள் வைத்த கோரிக்கை.. வெற்றி மாறனும் தாணுவும் எடுத்த முக்கிய முடிவு.. நாளைக்கு சம்பவம் உறுதி!

சென்னை: தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாக வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படம் உள்ளது. இந்தப் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார், மேலும் வெற்றிமாறன் கதை மற்றும் திரைக்கதையை எழுதி இயக்குகிறார். ரசிகர்கள் இந்தப் படத்தின் அப்டேட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படத்தின் புரோமோ வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர் தாணு ஏற்கனவே அறிவித்திருந்தார். இவரது அறிவிப்பின் படி படத்தின் புரோமோ நாளை அதாவது அக்டோபர் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் சிம்பு ரசிகர்கள் வைத்த கோரிக்கைக்கு ஏற்ற வகையில் தயாரிப்பாளர் தாணு தற்போது வெளியிட்டுள்ள தகவல் சிம்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்தப் படத்தின் புரோமோ சில மாதங்களுக்கு முன்பு படமாக்கப்பட்டது. இந்தப் படமும், வெற்றிமாறன் இயக்கத்தில் முன்னர் வெளியான வடசென்னை படமும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் நடக்கும் கதையைக் கொண்டவை என்று வெற்றிமாறன் முன்பே கூறியிருந்தார். படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படாததால், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், வரும் அக்டோபர் 4ஆம் தேதி படத்தின் புரோமோவை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளதாக தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'வடசென்னை' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வெற்றிமாறன் கதை, திரைக்கதை எழுதி இயக்கிய இந்தப் படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். இதன் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இந்தப் படம் 2026-ல் தொடங்கி 2027-ல் வெளியாகும் என தனுஷ் அறிவித்துள்ளார். தனுஷ் மற்றும் வெற்றிமாறன் எங்கு சென்றாலும், ரசிகர்கள் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இருவரும் இந்தத் தகவலைப் பகிர்ந்து வருகின்றனர்.

Vetri Maaran And STR Simbu Movie Promo Release on Theatres And Social at Same Time On October 4th
Photo Credit:

வடசென்னை உலகம்: இதே காலகட்டத்தில், வடசென்னை உலகத்தை மையமாகக் கொண்ட மற்றொரு கதையை இயக்குநர் வெற்றிமாறன் உருவாக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பு பணிகள் தற்போது நடந்து வருகின்றன. மேலும், படத்தின் புரோமோ வீடியோவும் படக்குழுவினரால் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. இந்தப் புரோமோ வீடியோ அக்டோபர் 4ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இப்படி இருக்கும்போது, ரசிகர்கள் படத்தின் புரோமோவை தியேட்டரில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்கள். அப்படி இருக்கும்போது, அவர்களின் கோரிக்கையை ஏற்று படத்தின் புரோமோவை தியேட்டரில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்து இருப்பதாக தயாரிப்பாளர் தாணு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

தியேட்டரில் ப்ரோமோ: இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில், " சிம்புவின் ரசிகர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க STR & வெற்றிமாறன் படத்தின் முன்னோட்டம் திரையரங்கிலும் சமூக வலைத்தளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியிடுவது ரசிகர்களின் இத்தனை நாள் பொறுமைக்கு ஈடுசெய்யும் நிகழ்வாக அமையும். ஆகையால் சென்சார் பணிகள் நிறைவுற்று, விரைவில் உங்கள் கண்முன்னே அந்த மாபெரும் முன்னோட்டம் வெளிவர உள்ளது. இதுவே STR-வெற்றிமாறன் கூட்டணி மீது ரசிகர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் அன்பிற்கும் எங்களின் நன்றியை தெரிவிக்கும் சிறப்பு தருணமாகும்.இனி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்" என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X