விடுதலை 2 படத்துக்காக கருணாஸ் மகன் பார்த்த வேலை.. படப்பிடிப்பு தளத்தில் வெற்றி மாறன் ரியாக்‌ஷன்!

சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, கென், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான விடுதலை பாகம் 2 படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு உள்ளது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. இது மட்டும் இல்லாமல், அரசியல் தளத்திலும் படம் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது. இப்படியான நிலையில் படத்திற்காக படத்தில் நடித்த கென் கருணாஸ் செய்த விஷயம் இயக்குநர் வெற்றி மாறனைக் கவர்ந்துள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

விடுதலை பாகம் 1இல் படம் சூரி கதாபாத்திரமான குமரேசன் கதாபாத்திரத்தை மைய்யபடுத்திய படமாக இருந்தது. ஆனால் விடுதலை பாகம் 2இல் முழுக்க முழுக்க, விஜய் சேதுபதி ஏற்று நடித்துள்ள வாத்தியார் கதாபாத்திரத்தின் இளமைக்காலத்தினை மைய்யமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றது. குறிப்பாக மஞ்சு வாரியரின் தோற்றமும், விஜய் சேதுபதியின் தோற்றமும் பெரும் கவனத்தினை ஈர்த்தது.

vetri maaran viduthalai part 2 2

படத்தின் ட்ரைலர் மற்றும் நடித்தவர்களின் தோற்றம் ரசிகர்களை ஒருபக்கம் ஈர்த்தால், படத்திற்கு இசை அமைத்துள்ள இளையராஜா, ரசிகர்களை உருகவைத்துவிட்டார். அதிலும் அவரே எழுதி பாடியுள்ள 'தினம் தினமும் உன் நெனப்பு' பாடல் யூடியூப் தளத்தில் ட்ரெண்ட் ஆகும் அளவுக்கு ரசிகர்கள் அந்தப் பாடலை ரிப்பீட் மோடில் பார்த்துக் கொண்டாடினர்.

vetri maaran viduthalai part 2 2

விஜய் சேதுபதி: விடுதலை பாகம் 1 படம் ரிலீஸ் ஆனதுமே, படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டினைப் பெற்றது. சூரியின் நடிப்பினை அனைவரும் பாராட்டினார்கள். விடுதலை பாகம் 2இல் வெற்றி மாறன் முழுக்க முழுக்க படத்தினை விஜய் சேதுபதியின் பெருமாள் கதாபாத்திரத்திற்காக உருவாக்கியுள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இது வசூலிலும் எதிரொலிக்கின்றது.

vetri maaran viduthalai part 2 2

கென்: படத்தின் முதல் பாதியில் நடிகர் கருணாஸின் மகன் கென் நடித்துள்ளார். அவர், அந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் கருப்பன் கதாபாத்திரத்திற்கு, உடல் எடையைக் கூட்டினால் நன்றாக இருக்கும், என தோன்றியது. இதனால் உடல் எடையைக் கூட்ட டையட் பின்பற்றினேன். அதன் படி, எடையைக் கூட்டினேன். படப்பிடிப்புத் தளத்தில் சட்டையைக் கழட்டிவிட்டு நின்றபோது, வெற்றி மாறன் சார் பார்த்துவிட்டு, " என்னடா, பெரிய ஆளு மாதிரி இருக்க எனக் கேட்டார். நான் உடனே படத்துக்காகத்தான் சார் உடம்பை ஏற்றினேன் எனக் கூறினேன். உடனே அவர் ஓ.கே." என்றார். வெற்றி மாறன் சாரிடம் ஓ.கே. வாங்குவதே பாராட்டு வாங்குவதைப் போன்றது என கென் கூறியுள்ளார்.

vetri maaran viduthalai part 2 2

பாராட்டு: அதேபோல் படத்தில் நான் நடித்த கருப்பன் கதாபாத்திரம் எனக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரமாக அமைந்துள்ளது. நான் பத்து நிமிடம்தான் நடித்துள்ளேன். ஆனால் அது படத்தில் இந்த அளவுக்கு வலுவானதாக இருக்கும் என நினைக்கவில்லை. ரசிகர்கள் என்னை மனதில் வைத்து பாராட்டுவது ஊக்கமாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X