சத்தியமங்கலத்தில் ஷுட்டிங்.. வெற்றிமாறன் இயக்கும் படம்.. சூரி ஜோடியாக இவர்தான் நடிக்கிறாராமே?

By

சென்னை: வெற்றிமாறன் இயக்கும் படத்தில் சூரி ஜோடியாக பவானி ஶ்ரீ நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Recommended Video

Master முதல் நாளில் முதல் ஷோவை பார்த்த நடிகர் Soori | Tamil Filmibeat

'அசுரன்' ஹிட்டுக்கு பிறகு, சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தொடங்க இருந்தார்.

கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டதால் பல குளறுபடிகள் நடந்தன.

துணைவன் சிறுகதை

துணைவன் சிறுகதை

இதனால், வாடிவாசல் படத்தை விட்டுவிட்டு, சூரி நடிக்கும் படத்தை இயக்க வெற்றிமாறன் முடிவு செய்தார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த சிறுகதை பல வருடங்களுக்கு முன் வார இதழ் ஒன்றில் வெளியானது.

சத்யமங்கலம் காடு

சத்யமங்கலம் காடு

இதில், நடிகர் சூரி போலீஸ்காரராகவும், பாரதிராஜா புரட்சியாளராகவும் முதலில் நடிப்பதாக இருந்தது. இதன் ஷூட்டிங் சத்யமங்கலம் காடுகளில் தொடங்கியது. ஒரே கட்டமாக, படப்பிடிப்பை முடிக்க முடிவு செய்திருந்தனர். ஆனால், கடும் குளிர் காரணமாக, அந்த படத்தில் இருந்து பாரதிராஜா விலகினார்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இதையடுத்து அந்தப் படத்தில் கிஷோர் நடிப்பதாகக் கூறப்பட்டது. அவராலும் அதில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், இப்போது விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், படக்குழு இதை அதிகாரபூர்வமாக. அறிவிக்கவில்லை. இந்நிலையில், இந்தப் படத்தின் சூரி ஜோடியாக, பவானி ஶ்ரீ ஒப்பந்தமாகி இருக்கிறார்.

சூரி ஜோடியாக

சூரி ஜோடியாக

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ. ரணசிங்கம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர், பவானி ஶ்ரீ. விஜய் சேதுபதிக்கு தங்கையாக அந்தப் படத்தில் நடித்திருந்தார். இவர் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் சகோதரி ஆவார். அடுத்து நெட்பிளிக்ஸில் வெளியான பாவக் கதைகள் ஆந்தாலஜியில் தங்கம் என்ற கதையில் நடித்திருந்தார்.

இளையராஜா இசை

இளையராஜா இசை

வெற்றிமாறன் இயக்கும் இந்தப் படத்தை, எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்கிறது. படத்துக்கு இளையராஜா இசையமைக்க இருக்கிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் சூர்யா நடிக்கும் வாடிவாசலை தொடங்க இருக்கிறார். இதை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X