Viduthalai :விடுதலை படத்தின் மொத்த வசூல்.. பார்ட் 2வுக்குதான் ரசிகர்கள் வெயிட்டிங்!

சென்னை :நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்ளிட்டவர்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியான விடுதலை படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுள்ளது.

இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

விரைவில் இந்தப் படத்தின் அடுத்த பாகத்தை ரிலீஸ் செய்துவிட்டு சூர்யாவின் வாடிவாசல் படத்தில் வெற்றிமாறன் இணையவுள்ளார்.

Vetri maarans Viduthalai movie collects more than 60 crores

விடுதலை படத்தின் மொத்த வசூல் : நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கௌதம் மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி கடந்த சில வாரங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசான நிலையில், படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் சில காட்சிகள் ரசிகர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்தனர்.

படத்தில் சூரி சாதாரண கான்ஸ்டபளாக நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். இந்தப் படத்தின்மூலம் அவர் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். முதல் படத்திலேயே மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதேபோல நடிகர் விஜய் சேதுபதிக்கு படத்தில் அதிகமான காட்சிகள் இல்லை என்றாலும் நடித்த சில காட்சிகளிலேயே மாஸ் காட்டியுள்ளார். இரண்டாவது பாகத்தில் அவருக்கு அதிகமான காட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Vetri maarans Viduthalai movie collects more than 60 crores

இந்தப்படத்தின் இரண்டாவது பாகத்தின் சூட்டிங்கும் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. விரைவில் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் மட்டுமில்லாமல் ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஓடிடியில் வெளியிடும்போது எக்ஸ்டெண்டட் வெர்ஷன் டைரக்டர் கட் என வெளியிட்டனர்.

Vetri maarans Viduthalai movie collects more than 60 crores

இதன்மூலம் திரையரங்குகளில் பார்க்க முடியாத காட்சிகளையும் ஓடிடியில் ரசிகர்களை கண்டு களித்தனர். இந்நிலையில் பெரும் வெற்றி பெற்றுள்ள இந்தப் படம் சர்வதேச அளவில் 60 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.எப்போதும் மிரட்டலான கதைக்களத்துடன் ரசிகர்களை என்டர்டெயின்மெண்ட் செய்பவர் இயக்குநர் வெற்றிமாறன். அவரது இயக்கத்தில் வெளியான விடுதலை படம் இத்தகைய சிறப்பை பெற்றுள்ளது.

காடு, மலை என மெனக்கெட்டு படக்குழுவினர் இந்தப் படத்தின் சூட்டிங்கை எடுத்து முடித்துள்ளனர். அவர்களின் இந்த முயற்சிக்கு ரசிகர்கள் சிறப்பான பெருமையை கொடுத்துள்ளனர். இந்தப் படத்தின் அடுத்த பாகமும் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அந்தப் படமும் இந்தப் படத்தின் அதே அனுபவத்தை கொடுக்கும் என்று நம்பலாம். இந்தப் படத்தின் ரிலீசை தொடர்ந்து வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணையவுள்ள நிலையில், அந்தப் படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X