விற்றுத் தீர்ந்தது விடுதலை படத்தின் டிஜிட்டல் -சாட்டிலைட் ரைட்ஸ்.. மார்ச் 31ல் ரிலீஸ்!
சென்னை : நடிகர் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விடுதலை.
இரண்டு பாகங்களாக விடுதலை படம் உருவாகியுள்ள நிலையில், முதல் பாகம் மார்ச் 31ம் தேதி ரிலீசாகவுள்ளது.
இதனிடையே நடிகர் தனுஷ் குரலில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

விடுதலை படம்
நடிகர் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் மார்ச் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள படம் விடுதலை. இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது.

மார்ச் 31ம் தேதி ரிலீஸ்
படத்தின் முதல் பாகம் அடுத்த மாதத்தில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பர்ஸ்ட் சிங்கிள், கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் பாடியுள்ள இந்தப் பாடல், காதல் மெலடியாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் பாடலை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இளையராஜாவுடன் கூட்டணி
படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் ஜிவி பிரகாஷ்குமாரின் தங்கை பவானிஸ்ரீ உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் வெற்றிமாறன், இசையமைப்பாளர் இளையராஜாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். அவரது இசையில் பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டிஜிட்டல் -சாட்டிலைட் ரைட்ஸ்
வெற்றி மாறனின் விடுதலை படம் பல்வேறு எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகள் விற்றுத் தீர்ந்துள்ளதாக படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலை படத்தின் டிஜிட்டல் ரைட்சை ஜீ5 நிறுவனமும் சாட்டிலைட் ரைட்சை கலைஞர் டிவியும் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெற்றிமாறன் அடுத்தடுத்த படங்கள்
இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல், ஜூனியர் என்டிஆருடன் ஒரு படம் என அடுத்தடுத்த கமிட்மெண்ட்களில் வெற்றிமாறன் இணைந்துள்ளார். இந்நிலையில், இவற்றிற்கு முன்னதாக வெப் தொடர் ஒன்றை அவர் இயக்கவுள்ளதாகவும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு அந்த தொடர் உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டு பாகங்கள்
விடுதலை படத்தை சூரியை வைத்தே எடுக்கத் துவங்கினார் வெற்றிமாறன். தொடர்ந்து இந்த கதையில் விஜய் சேதுபதி இணைந்த நிலையில், அவருக்காக கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டு, படம் இரண்டு பாகங்களாக உருவானது. முதல் பாகத்தில் சூரிக்கும் இரண்டாவது பாகத்தில் விஜய் சேதுபதிக்கும் இந்தக் கதையில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications