ரெட் ஜெயண்ட் வெளியிட்ட விடுதலை படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.. கலக்கல் காம்பினேஷன்தான்!

சென்னை : சூரி -விஜய் சேதுபதி காம்பினேஷனில் பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிவரும் படம் விடுதலை.

இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதாக முன்னதாக படக்குழு தரப்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் முதல் பாகம் வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பாளர் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது விடுதலை படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் நாயகனாக சூரி நடித்து வரும் நிலையில், மிகவும் அழுத்தமான கேரக்டரில் விஜய் சேதுபதியும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் விரைவில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 நீட்டிக்கப்பட்ட விஜயசேதுபதி ரோல்

நீட்டிக்கப்பட்ட விஜயசேதுபதி ரோல்

இந்தப் படத்தில் முதலில் கேமியோ ரோலில் நடிக்கவே விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் தொடர்ந்து அவரது கேரக்டரை வெற்றிமாறன் படம் முழுக்க வரும்படி செய்துள்ளார். இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை தற்போது உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.

2 பாகங்களாக வெளியீடு

2 பாகங்களாக வெளியீடு

இதனிடையே விரைவில் ரிலீசாக உள்ள இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக சூர்யாவின் வாடிவாசல் படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ள வெற்றிமாறன், அந்தப் படத்தை தொடர்ந்து விடுதலை 2 படத்தை இயக்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 முக்கிய கேரக்டரில் கௌதம் மேனன்

முக்கிய கேரக்டரில் கௌதம் மேனன்

இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் பிரபல இயக்குநர் கௌதம் மேனனும் இணைந்து நடித்துள்ளார். பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய இளையராஜா இசையமைத்துள்ளார்.

சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் தூண்டியுள்ளன. எப்போதுமே அழுத்தமான கதைக்களங்களில் தன்னுடைய படங்களை கொடுத்துவரும் வெற்றிமாறன், இந்தப் படத்தில் சூரியுடன் களமிறங்கியுள்ளது படத்திற்கான முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X