விஜய் சேதுபதிக்காக வெயிட் செய்யும் வெற்றிமாறன்... எதுக்குன்னு பாருங்க

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி லீட் கதாபாத்திரத்தில் நடித்துவரும் படம் விடுதலை.

படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்களும் நடித்து வருகின்றனர்.

வெற்றிமாறனின் அசுரன்

வெற்றிமாறனின் அசுரன்

நடிகர் தனுஷ் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் அசுரன். இந்தப் படம் விமர்சனரீதியாக சிறப்பான பெயரை பெற்றது. தனுஷின் கேரியர் பெஸ்ட் படங்களில் ஒன்றாக இந்தப் படம் அமைந்துள்ளது. தேசிய விருதுகளையும் பெற்றது.

சூரியின் விடுதலை படம்

சூரியின் விடுதலை படம்

இந்நிலையில் இந்தப் படத்திற்கு பிறகு சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்கவிருந்தார் வெற்றிமாறன். அந்தப் பிராஜக்ட் சிறிது தாமதமான நிலையில், இடைப்பட்ட கேப்பில் சூரி லீட் கதாபாத்திரத்தில் நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.

முக்கிய ரோலில் விஜய் சேதுபதி

முக்கிய ரோலில் விஜய் சேதுபதி

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்களும் நடித்து வருகின்றனர். ஜிவி. பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ இந்தப் படத்தின் நாயகியாக நடித்து வருகிறார். படத்தின் சூட்டிங் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

சூட்டிங் நிறுத்தம்

சூட்டிங் நிறுத்தம்

படத்தின் போஸ்டர்களும் வெளியிடப்பட்டு ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்திருந்தது. விஜய் சேதுபதி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் சூட்டிங் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

கால்ஷீட் கொடுக்காத விஜய் சேதுபதி

கால்ஷீட் கொடுக்காத விஜய் சேதுபதி

இதற்கு முக்கிய காரணமாக விஜய் சேதுபதியை சுட்டிக் காட்டுகிறது படக்குழு. அவர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் நிலையில் தற்போது அவரது கால்ஷீட்டிற்காக படக்குழு காத்திருக்கிறது. அவர் தற்போது அதிகமான படங்களில் பிசியாக நடித்து வருவதால் இந்தப் படத்திற்கு கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதிக்காக வெயிட்டிங்

விஜய் சேதுபதிக்காக வெயிட்டிங்

அவரது கால்ஷீட் கிடைத்தால் மட்டுமே மீண்டும் படப்பிடிப்பை துவங்க முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சூரியும் தான் காமெடியனாக நடிக்கும் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். இந்தப் படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைய திட்டமிட்டுள்ள நிலையில் அதன் சூட்டிங்கும் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X