Viduthalai Part 2 Box Office: வெற்றி மாறன் செம ஹேப்பி.. கிறிஸ்துமஸில் வசூலை அள்ளிய விடுதலை 2!

சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 20ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் விடுதலை பாகம் 2. இந்தப் படம் ஏற்கனவே வெளியான விடுதலை பாகம் 1இன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ளது. அரசியல் தளத்தினைக் கடந்து பொது மக்கள் மத்தியிலும் இந்தப் படம் பெரும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளதால் படத்தின் வசூல் நாளுக்கு நாள் சீராகவே உள்ளது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினமான நேற்று படத்தின் வசூல் எந்த அளவுக்கு இருந்தது என்பது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

ஏற்கனவே வெளியான விடுதலை பாகம் 1 படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக இருந்த சூரி கதாநாயகன் அவதாரம் எடுத்தார். இதுமட்டும் இல்லாமல், அவரது எதார்த்த நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து பெரும் பாராட்டுக்கள் கிடைத்தது. அப்படியான நிலையில், சூரி அடுத்தடுத்து கதையின் நாயகனாக, கதாநாயகனாக படங்களில் நடித்தார். விடுதலை பாகம் 1 படத்தில் எந்த அளவுக்கு தனது நடிப்பின் மூலம் படத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினாரோ, அதே அளவுக்கு இந்தப் படத்திலும் தனக்கு கிடைத்த இடங்களில் ஸ்கோர் செய்துள்ளார்.

vijay sethupathi viduthalai part 2 vetri maaran 2

விடுதலை பாகம் 2 படம் முழுக்க முழுக்க விஜய் சேதுபதி ஏற்று நடித்த பெருமாள் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தை மைய்யமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் விஜய் சேதுபதி பேசும் ஒவ்வொரு வசனமும், ரசிகர்களாலும் அரசியல் செயல்பாட்டாளர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது. குறிப்பாக விடுதலை பாகம் 2க்கு என இருந்த ரசிகர்கள் மத்தியில் படத்தின் வசனங்கள் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது.

மஞ்சு வாரியர்: படத்தில் இடம் பெற்ற மஞ்சு வாரியர் கதாபாத்திரம் பேசும் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் கைத்தட்டல்களை அள்ளியது. இன்னும் சொல்லப்போனால் இன்றைக்கு இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்படும் வீடியோக்களில், விடுதலை பாகம் 2இல் மஞ்சு வாரியர் பேசும் வசனங்கள்தான் உள்ளது.

vijay sethupathi viduthalai part 2 vetri maaran 2

வசூல்: படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், படத்தின் வசூலும் சீராக உள்ளது. வார இறுதி நாட்களில் படம் பார்க்க அதிகப்படியான ரசிகர்கள் வருவதால், படத்தின் வசூல் வார இறுதி நாட்களில் அதிகரிக்கின்றது. அதேபோல் நேற்று அதாவது கிறிஸ்துமஸ் தினத்தில் படம் பார்க்க ரசிகர்கள் வந்ததால், படத்தின் வசூல் அதிகரித்துள்ளது. படம் வெளியாகி நேற்றுடன் ஆறு நாட்கள் ஆகியுள்ளது. இந்த ஆறு நாட்களில் படத்தின் வசூல் என்பது, இந்திய அளவில், ரூபாய் 32 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கிறிஸ்துமஸ் தினத்தில் படத்தின் வசூல் மட்டும் ரூபாய் 4 கோடிகள் வரை உலக அளவில் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

vijay sethupathi viduthalai part 2 vetri maaran 2

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள வசூல் கணக்கு என்பது, படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வசூல் கணக்கு இல்லை. எனவே வாசகர்கள், இதனை படத்தின் அதிகாரப்பூர்வ வசூல கருதவேண்டாம். மேலும், இதில் குறிப்பிடப்பட்டுள்ள வசூல் என்பது, தோராயக் கணக்குதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X