Viduthalai 2: கணவன் -மனைவியாக விஜய் சேதுபதி -மஞ்சு வாரியர்.. விடுதலை 2 படத்தின் அடுத்தடுத்த அப்டேட்!

சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான விடுதலை படம் மிகச்சிறப்பான வகையில் ரசிகர்களை கவர்ந்தது.

இந்தப் படத்தை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகமும் தற்போது உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vetri maarans Viduthalai 2 movie next to next updates released

விடுதலை படம்: நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம் விடுதலை. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியிருந்தது. இளையராஜா இசையமைப்பில் படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆர் எஸ் இன்போடெயின்மெண்ட் இந்தப்படத்தை தயாரித்திருந்தது.

இரண்டு பாகங்கள்: இரண்டு பாகங்களாக விடுதலை படம் ரிலீசாகவுள்ளதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வரவேற்பையும் சில கலவையான விமர்சனங்களையும் பெற்றது. இருந்தபோதிலும் எதிர்பார்த்ததை காட்டிலும் வசூலிலும் சிறப்பாகவே அமைந்தது. முதல் பாகத்தில் நடிகர் சூரிக்கு நடிப்பதற்கு அதிகமான ஸ்கோப் இருந்தது. இந்நிலையில் தற்போது உருவாகிவரும் விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரசிகர்களை கவர்ந்த பெருமாள் வாத்தியார்: படத்தில் பெருமாள் வாத்தியார் என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். முதல் பாகத்திலேயே மலைக்கிராமத்தில் அமைக்கப்படவுள்ள சுரங்கத்தை எதிர்த்து அவர் போராடுவதாக அமைந்திருந்தது. இந்நிலையில் தற்போது உருவாகிவரும் இரண்டாவது பாகத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இவர்கள் இருவரும் படத்தில் கணவன் -மனைவியாக இணைந்துள்ளனர்.

கணவன் -மனைவியாக விஜய் சேதுபதி -மஞ்சுவாரியர்: இவர்கள் கடந்த 1960ம் ஆண்டில் வாழ்வதாக காட்டப்படும் நிலையில் இவர்கள் இருவரையும் De-Aging தொழில்நுட்பத்தில் இணைத்து இளமையாக காட்டப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தில் இன்னும் அதிகமான காட்சிகள் படமாக்கப்பட உள்ள நிலையில் படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விடுதலை 2 படத்தில் சூரியின் கேரக்டர் குறித்து ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

வெயிட்டான விஜய் சேதுபதி ரோல்: இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைய வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் படத்தின் சூட்டிங்கை இந்த ஆண்டிற்குள் அவர் இயக்கி முடித்துவிடுவார் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் விஜய் சேதுபதியின் காட்சிகள் இந்தப்படத்தில் அதிகமாக இருக்கும்வகையில் திரைக்கதையில் மாற்றங்களை அவர் செய்துள்ளார். அதனால் சூட்டிங் மேலும் நீண்டுக் கொண்டு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X