Viduthalai 2: தென்காசியில் நடக்கும் விடுதலை 2 சூட்டிங்.. வெற்றிமாறனின் அடுத்தக்கட்ட பிளான் தெரியுமா!

சென்னை: நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, சேத்தேன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியானது விடுதலை படம். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறிய நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்கி வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

முதல் பாகத்தின் ஷூட்டிங்கின்போதே இரண்டாவது பாகத்திற்கான ஷூட்டிங்கும் ஏறக்குறைய நிறைவடைந்ததாக படக்குழு சார்பில் கூறப்பட்டது. ஆனால் முதல் பாகத்துக்கு கிடைத்த சிறப்பான வரவேற்பு காரணமாக தற்போது இரண்டாவது பாகத்தின் கதைக்களத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி சூட்டிங்கை வெற்றிமாறன் நடத்தி வருவதாகவும் தற்போது படப்பிடிப்பு தென்காசியில் நடந்து வருவதாகவும் படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vetri maaran s Viduthalai 2 movie shooting happening in Thenkasi

விடுதலை 2 படம்: நடிகர் விஜய் சேதுபதி, சூரி, சேத்தன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது விடுதலை 2 படத்தின் ஷூட்டிங். இந்தப் படம் முதல் பாகத்தை காட்டிலும் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அமையும் என்று நடிகர் சூரி சமீபத்தில் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். முதல் பாகத்தில் சூரி அதிகமான காட்சிகளில் நடித்திருந்தார். இவருக்கும் பவானி ஸ்ரீக்கும் இடையிலான காதலும் சிறப்பாக காட்டப்பட்டிருந்தது. படத்தில் பெருமாள் வாத்தியாராக நடித்திருந்த விஜய் சேதுபதியின் காட்சிகள் குறைவாகவே இருந்தன.

தென்காசியில் விடுதலை 2 சூட்டிங்: இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் இணைந்துள்ளார். இவர்கள் இருவரின் பிளாஷ்பேக் காட்சிகள் சிறப்பாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் சூட்டிங் தென்காசியில் நடைபெற்று வருவதாகவும் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் மேற்பார்வையில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஷெட்யூலை அடுத்து இன்னும் சில வாரங்கள் படத்தின் சூட்டிங் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா பயணமாகும் வெற்றிமாறன்: படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு இயக்குனர் வெற்றிமாறன் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு பிளாஷ்பேக் காட்சிகள் அமைந்துள்ளன. அதில் அவரை டீ-ஏஜிங் தொழில்நுட்பம் மூலம் இளமையாக காட்டும் முயற்சியில் வெற்றிமாறன் ஈடுபட்டுள்ளார். இதற்கான பணிகளை மேற்கொள்வதற்காகவே அவர் படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அமெரிக்கா பறக்க உள்ளார். இந்த ப்ராசஸ் நிறைவடைந்த உடன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

வரவேற்பை பெற்ற விடுதலை படம்: வெற்றிமாறன் இயக்கத்தில் இளையராஜா இசையில் சூரி, பவானிஸ்ரீ, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்த விடுதலை படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி ரிலீசானது. முதலில் ஒரே பாகமாக மட்டுமே இந்த படம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் நீளம் அதிகமாக இருந்ததால் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட வெற்றிமாறன் திட்டமிட்டார். இதன்படி கடந்த ஆண்டில் முதல் பாகம் வெளியானது. தற்போது படத்தின் இரண்டாம் பாகத்திற்கான சூட்டிங் நடந்து வருகிறது.

மாற்றங்களுடன் உருவாகும் விடுதலை 2: இரண்டாம் பாகத்திற்காக சில மாற்றங்களை வெற்றிமாறன் செய்து தற்போது ஷூட்டிங்கை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. முதல் பாகத்திற்கு அதிகமான வரவேற்பு கிடைத்ததால் இரண்டாம் பாகத்தை மேலும் சிறப்பாக கொடுக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முதல் பாகம் ஓடிடியிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதால் இரண்டாம் பாகத்திற்காக மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படத்தை வெற்றிமாறன் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X