முதல் முறையாக இணையும் சூப்பர் கூட்டணி… கலைப்புலியின் லேட்டஸ்ட் அப்டேட்!

சென்னை : இயக்குனர் வெற்றி மாறன் இயக்கும் அடுத்த படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தயாரிப்பாளர் கலைப்புலி தானு தனது ட்விட்டரில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

 Vetri Maran and Surya join new combo

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக திகழ்ந்து வருபவர் வெற்றி மாறன். இயக்குநர் பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் இருந்து வெளிவந்த முத்து தான் இவர். இவரின் திரைப்படங்களுக்கு தமிழில் மட்டும் அல்ல தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் மவுசு அதிகமாக உள்ளது.

 Vetri Maran and Surya join new combo

பொல்லாதவன், ஆடுகளம்,விசாரணை, வட சென்னை, அசுரன் மொத்தம் 5 படங்களை மட்டுமே இயக்கி உள்ளார். 5 படங்களும் வித்தியாசமான கதை அம்சம் கொண்டதாவும், சமூக அக்கறை உள்ள படங்களாகவுமே இருக்கும். இதுவரை மூன்று தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

 Vetri Maran and Surya join new combo

ஆடுகளம் படத்திற்கு மட்டும் இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான விருது கிடைத்தது மற்றும் விசாரணை படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது கிடைத்தது. இவரின் படைப்புகள் இந்திய சினிமாவையே தமிழ் சினிமாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.

அசுரன் படத்தைத் தொடர்ந்து வெற்றி மாறன், அடுத்த படத்தில் சூரியாவுடன் இணைய உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த தகவலைகளை தயாரிப்பாளர் கலைப்புலி தானு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில், அசுரனின் அரசு வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் முதல் முறையாக சூர்யாவுடன் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன் தெரிவித்துள்ளார்.

 Vetri Maran and Surya join new combo

சூர்யாவின் 39 ஆவது படத்தை சிவா இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. பின் அவர் ரஜினி உடன் இணைந்ததால் சூர்யா அடுத்து யார் உடன் இணைகிறார் என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த அப்டேட்டை சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பரவ விட்டுள்ளனர்.

 Vetri Maran and Surya join new combo

பல நடிகர்களால் செய்ய முடியாததை சூர்யா செய்து நிரூப்பித்துள்ளார். கடந்த சில வருடங்களாக இவரால் ஹிட் படத்தை கொடுக்க முடியவில்லை என்ற கவலையில் இருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியைத் தந்துள்ளது. மேலும் பிதாமகன் மற்றும் நந்தா போன்ற படங்களின் வரிசையில் இப்படம் நிச்சயம் அமையும் என்று சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X