ஜன நாயகன் FDFS அதிக விலைக்கு விற்கப்பட்டதா?.. பதறிப்போன பிரபல தியேட்டர் ஓனர்.. ஓபனா சொல்லிட்டாரே!
சென்னை: விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் பல தடைகளை தாண்டி இன்று ஒரு வழியாக உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பகவந்த் கேசரி ரீமேக், ஏற்கனவே மொத்த படமும் லீக் ஆகிடுச்சு, இதுக்கு மேல படத்தை யாரு பார்க்க வருவா என கிகிபிக்கி பண்ணிக் கொண்டிருந்த ஹேட்டர்களுக்கு விஜய் ரசிகர்களும் பொது மக்களும் புக் மை ஷோவில் தொடர்ந்து டிக்கெட் புக்கிங்கை அடித்து நொறுக்கி பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தளபதி விஜய் படமாக வரக்கூடாது என தடுக்கப்பட்ட நிலையில், இன்று முதலமைச்சர் விஜய் என்கிற டைட்டில் கார்டுடன் படம் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தியும் கடைசியில் பிரியமுடன் விஜய் என "உள்ளே ஒலிச்ச ஒலியாக" பாடலுடன் விஜய்யின் திரை சகாப்தத்திற்கு எண்ட் கார்டு போடும் போது ரசிகர்கள் கண்ணீர் மல்க தியேட்டர்களை விட்டு வெளியேறுவதுமாக உள்ளனர்.

இதற்கிடையே ஜன நாயகன் படத்துக்கு வெற்றி தியேட்டரில் அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் கிளம்பிய நிலையில், அதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்விகளுக்கு வெற்றி தியேட்டர் ஓனர் பதிலளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தான் குறைவு: தி ஒடிஸி திரைப்படமே இந்தியாவில் ஒரு சில ஐமேக்ஸ் தியேட்டர்களில் 3500 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வெளியானது. ஆனால், தமிழ்நாட்டில் விஜய் நடித்த கடைசி படமான ஜன நாயகன் திரைப்படம் அதிகபட்சமாக 190 ரூபாய் டிக்கெட் விலைக்கே தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படுவதாக தியேட்டர்கள் ஓனர்கள் கூறுகின்றனர். பெங்களூருவில் அதிகப்படியாக சினிபொலிஸ் சாந்தி நிகேதன் தியேட்டரில் 2500 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை ஆவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
500 ரூபாய், 1000 ரூபாய்: அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யக் கூடாது என விஜய் தரப்பில் இருந்து உத்தரவு வந்த நிலையிலும், சில தியேட்டர்களில் காலை முதல் காட்சி டிக்கெட்டுகள் 500 முதல் 1000 ரூபாய் வரை வழக்கம் போல ரசிகர் மன்ற டிக்கெட்டுகளாக விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் கிளம்பின. குறிப்பாக குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டரில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக சர்ச்சை வெடித்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அந்த தியேட்டர் ஓனர் டிக்கெட்டுகளை ஆன்லைனில் தான் விற்றோம் என்றும் அதிக விலைக்கு விற்கவில்லை என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications