»   »  கோட்டா நீலிமாவின் பிரபல அரசியல் நாவலைப் படமாக்கும் வெற்றிமாறன்!

கோட்டா நீலிமாவின் பிரபல அரசியல் நாவலைப் படமாக்கும் வெற்றிமாறன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எழுத்தாளர்களின் நாவல்களைப் படமாக்கும் கலை வெற்றிமாறனுக்கு நன்றாகவே கைவந்துவிட்டது. சந்திரகுமாரின் லாக்கப் நாவலை விசாரணை என்ற படமாக எடுத்து நல்ல பெயரையும் பெற்றுவிட்ட வெற்றி மாறன் அடுத்து ஒரு பிரபல நாவலைப் படமாக்குகிறார்.

அந்த நாவலின் பெயர் ஷூஸ் ஆப் தி டெத் (Shoes of the Dead). எழுதியவர் கோட்டா நீலிமா. சண்டே கார்டியன் பத்திரிகையின் அரசியல் ஆசிரியராக இருப்பவர் நீலிமா. இது முழுக்க முழுக்க அரசியல் நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.

Vetrimaaran to adapt a popular political novel!

விவசாயிகளின் தற்கொலை, அதற்குப் பின்னால் உள்ள அரசியல் பற்றிப் பேசும் துணிச்சலான நாவல் இது.

இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள வெற்றிமாறன், "கோட்டா நீலிமாவின் நாவலைப் படமாக்கும் உரிமையைப் பெற்றுள்ளேன். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது நாவலைப் படமாக்க தேர்வு செய்ததற்காக வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் கோட்டா நீலிமா.

இந்தப் படத்தை வெற்றிமாறன் தனியாகவே தயாரிக்கிறார். இதற்கு முன் இரு படங்களை அவர் தனுஷுடன் சேர்ந்து தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Director Vetrimaaran has bought the film adaptation rights of hard-hitting political novel, Shoes of the Dead written by Kota Neelima.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil