twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டோட்டலா கதையவே மாத்திட்டாரு… வெற்றிமாறன் மீது பூமணிக்கு இப்படியொரு வருத்தம்!

    எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை தழுவி எடுக்கப்பட்ட அசுரன் படத்தின் பல காட்சிகள் தனது நாவலில் இல்லாதது என பூமணி கூறியுள்ளார்.

    |

    Recommended Video

    Vekkai Novel Writer Poomani about Asuran | வெற்றிமாறன் மீது பூமணிக்கு இப்படியொரு வருத்தம்!

    சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஆட்சி செய்து வருகிறது.

    எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை தழுவி தான் அசுரன் படம் எடுக்கப்பட்டுள்ளது.

    ஆனால், படத்தின் வீரியத்துக்காக நாவலில் இல்லாத பல காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக பூமணி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

    நடிப்பு அசுரன்

    நடிப்பு அசுரன்

    இதுவரை வாலிப வேடத்திலே நடித்து வந்த நடிகர் தனுஷ், முதல் முறையாக மூன்று குழந்தைகளுக்கு தந்தை என்ற வயோதிக வேடம் ஏற்று சிவசாமியாகவே அசுரன் படத்தில் வாழ்ந்திருந்தார். கோபம் கொண்டு எதிரிகளை வெட்டி சாய்க்கும் வேலையில் தனுஷ், தனது நடிப்பு அசுரனை அவிழ்த்து விட்டிருக்கிறார் என்றே சொல்லலாம்.

    வெக்கை நாவல்

    வெக்கை நாவல்

    அங்காடி நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதினை வென்ற எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை' நாவல் தான் அசுரன் படத்தின் மூலக் கதை. இளைய மகன் சிதம்பரத்தின் பார்வையில் தான் வெக்கை நாவலின் கதை நகரும். ஆனால், அசுரன் படம், தந்தை சிதம்பரம் கதாபாத்திரத்தில் நடித்த தனுஷின் பார்வையில் நகரும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளது.

    பூமணியின் வருத்தம்

    பூமணியின் வருத்தம்

    அசுரன் படம் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், அதுகுறித்த பேட்டி ஒன்றிற்கு பூமணி பதிலளித்துள்ளார். அப்போது, நாவலில் இருந்த சிதம்பரத்தின் அத்தை கதாபாத்திரம் படத்தில் இல்லாததும், கரிசல்காட்டு பேச்சு வழக்கிற்கு பதிலாக நெல்லை பேச்சு வழக்கை மாற்றி அமைத்துள்ளது வருத்தத்தை கொடுப்பதாக கூறியுள்ளார்.

    கதையில் மாற்றம்

    கதையில் மாற்றம்

    வெக்கை நாவலை தழுவி எடுக்கப்பட்ட அசுரன் திரைப்படத்தில், சினிமாவிற்கான வீரியம் தேவைப்படுவதால், இயக்குநர் வெற்றிமாறன் நாவலில் இல்லாத பல காட்சிகளை சேர்த்துள்ளதாக பூமணி கூறியுள்ளார். மகனுக்காக ஊரார் கால்களில் விழும் காட்சி, தனது நாவலில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    நாவலாக இருக்கும் கதையை படமாக மாற்றி பட்டி தொட்டிகளுக்கெல்லாம் கொண்டு சேர்த்த வெற்றிமாறனுக்கு தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் பூமணி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

    English summary
    Poomani is quite disappointed with the removal of a character that he loves a lot. In the novel, actor Pasupathy’s character has a wife who is also chidambaram's aunt.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X