'வன்முறை எங்க மொழி இல்ல, ஆனா, எங்களுக்கு அந்த மொழியும் பேசத் தெரியும்' விடுதலை 2 டிரைலர் வெளியானது!

சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதியின் அட்டகாசமான நடிப்பில் உருவாகி உள்ள 'விடுதலை 2’ திரைப்படம் உலகம் முழுவதும் டிசம்பர் 20ம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், படத்தின் மிரட்டலான டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

காமெடியில் கலக்கி வந்த சூரி, விடுதலை படத்தின் மூலம் மற்றுமொரு பரிமானத்தை எடுத்துள்ளார். விடுதலை படத்தில் கான்ஸ்டபில் குமரேசனாக நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி சூரி, நகைச்சுவை நடிகராக நடித்த போது, இருந்த ரசிகர்களை விட, அவர் ஹீரோவான பின் அவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உருவாகி உள்ளது. ஒவ்வொரு படத்திலும் நான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்து வருகிறார்.

viduthalai 2 trailer vijay sethupathi 2

விடுதலை முதல் பாகம்: விடுதலை முதல் பாகத்தில், விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடத்திருந்தனர். இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல்பாகத்தில் விஜய் சேதுபதி கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்து பாகத்தில் நடக்கப்போவது என்ன, வாத்தியாராக இருந்த விஜய்சேதுபதி, ஏன் போராளியாக மாறினார் என்பதை இரண்டாம் பாகத்தில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.

விடுதலை 2: விடுதலை இரண்டாம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற படத்தின் பணி முடிவடைந்துள்ளது. இப்படம் உலகம் முழுவதும் டிசம்பர் 20ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் பாடலான 'தினம் தினமும்’ படம் இளையராஜாவின் காந்த குரலில் மனதை வருடும் வகையில் வெளியாகி இணையத்தில் டிரெண்டிங்கில் இருக்கிறது.

டிரைலர் வெளியாது: இந்நிலையில்,இன்று சென்னையில் விடுதலை 2 திரைப்படத்தின் இசைவெளியீடு மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், சற்று முன் விடுதலை 2 படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. 2.40 நிமிட ஓடக்கூடிய இந்த டிரைலரில் விஜய்சேதுபதியின் குரலில், நிலம், இனம், மொழி என மக்களை ஒன்று சேர்க்கும் வேலையை நாங்க செய்ய ஆரம்பித்தோம் என்று டிரைலர் தொடங்கிறது. விடுதலை முதல் பாகத்தில் முகம் காட்டாமல் இருந்த விஜய்சேதுபதி, துப்பாக்கியும் கையுமாக கர்ஜிக்கிறார்.

அதிரடி வசனம்: வன்முறை எங்க மொழி இல்லை, ஆனால், எங்களுக்கு அந்த மொழியும் பேசத் தெரியும் என்ற வசனமும், தத்துவம் இல்லாத தலைவர்கள், வெறும் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவார்கள், அது முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது என்ற வசனம் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், மஞ்சுவாரியரின் காதல் காட்சியும் டிரைலரில் ஆங்கிரமித்துள்ளது. சற்று முன் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X