பேட் கேர்ள் தான் கடைசி படம்.. கடையை சாத்துறோம்.. வேதனையில் வெற்றிமாறன் எடுத்த முடிவு!

சென்னை: பேட் கேர்ள் படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் வெற்றிமாறன் ஏகப்பட்ட சர்ச்சைகளையும் அழுத்தங்களையும் சந்தித்து வந்த நிலையில், இதற்கு மேல் தயாரிப்பு நிறுவனத்தை தொடர போவதில்லை என்கிற முடிவை வெளிப்படையாக அறிவித்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் முதன் முதலாக தனக்கும் தனுஷுக்கும் எந்தவொரு சண்டையும் இல்லை என்றும் சிம்புவுடன் படம் பண்ணுவதற்கு அவர் என்ஓசியை இலவசமாகவே வழங்கினார் என்றும் தனது தயாரிப்பு நிறுவனமான கிராஸ்ரூட் சேனல் மூலம் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

Vetrimaaran announces Bad Girl is his last production movie shocks Kollywood

இந்நிலையில், இன்று நடைபெற்ற பேட் கேர்ள் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், தனது தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதாக வேதனையுடன் பேசியது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்தடுத்து சோதனை: பொல்லாதவன் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான வெற்றிமாறன் ஆடுகளம் படத்தை இயக்கி தேசிய விருதை வென்றார். விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை 1 மற்றும் 2 என அடுத்தடுத்து தரமான படங்களை இயக்கினார். வடசென்னை படத்தை இயக்கும் போது தான் ஏகப்பட்ட எதிர்ப்புகளை முதன்முறையாக சந்தித்தார். ஆண்ட்ரியா அரை நிர்வாணமாக நடித்த பாடல் காட்சி நீக்கப்பட்டது. மேலும், ஆபாச வசனங்கள் பேசியது, வடசென்னை மக்களை ரவுடிகளாக காட்டியது என ஏகப்பட்ட பிரச்சனைகள். அதையெல்லாம் தாண்டி அவர் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நிலையில், பேட் கேர்ள் மற்றும் மனுஷி என அடுத்தடுத்து ஏகப்பட்ட சோதனைகளை சந்தித்து வந்த வெற்றிமாறன் இதற்குமேல் முடியாது என நினைத்து அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

கடையை சாத்துறோம்: பேட் கேர்ள் படத்தில் பிராமண சமூக பெண்ணை மோசமாக சித்தரித்துள்ளார் வெற்றிமாறன் என கடும் எதிர்ப்பு அந்த படத்துக்கு எதிராக கிளம்பியது. படத்தின் ரிலீஸ் பல மாதங்கள் தள்ளிப்போன நிலையில், தற்போது மறு தணிக்கை செய்யபப்ட்டு யு/ஏ 16+ சான்றிதழ் உடன் இந்த வாரம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், பேட் கேர்ள் படம் தான் தனது தயாரிப்பில் உருவாகும் கடைசி படம் என்றும் இதற்கு மேல் புதிதாக எந்தவொரு தயாரிப்பையும் செய்யப்போவதில்லை என சொல்லிவிட்டு தனது கிராஸ்ரூட் ஃபிலிம் நிறுவனத்தின் கடையை சாத்துவதாக வெற்றிமாறன் மிகுந்த மனவேதனையுடன் கூறியுள்ளார்.

மனுஷி படத்துக்கும் சிக்கல்: கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்த மனுஷி திரைப்படத்தையும் வெற்றிமாறன் தயாரித்துள்ளார். அந்த படம் தணிக்கை செய்யப்பட்டு அதன் பின் ரிவிஷன் கமிட்டியிடம் 2 முறை சென்று, நீதிமன்றத்தில் பார்க்கப்பட்டு தற்போது ரிலீஸுக்கு தயாராகி விட்டதாகவும் தொடர்ந்து சோதனைகள் மற்றும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், வணிக ரீதியாக பல சிக்கல்களை சந்திப்பதால் இப்படியொரு முடிவை தான் எடுத்திருப்பதாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X