Vetrimaaran Net Worth: 49 வயது.. 5 தேசிய விருதுகள்.. வெற்றிமாறன் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தமிழ் சினிமாவில் தரமான இயக்குநராக ஒவ்வொரு படத்தையும் உணர்வுபூர்வமாகவும் உலகத்தரத்துடனும் கொடுத்து வருகிறார். இவரது படங்கள் வெளியானாலே தேசிய விருதுகளை எடுத்து வைங்கப்பா என சொல்லும் அளவுக்கு எல்லா படங்களும் வொர்த்தான படங்கள் தான்.
பல்சர் பைக்கை வைத்து பக்காவான கேங்ஸ்டர் படத்தைக் கொடுக்க முடியும் என பொல்லாதவன் படத்தில் இயக்குநராக அறிமுகமான வெற்றிமாறன் அடுத்து தனுஷை கிராமத்துக்கு அழைத்துச் சென்று அவரது கையில் சேவலை கொடுத்து மிகப்பெரிய ஆடுகளத்தையும் அமைத்து தேசிய விருதுகளையும் அள்ளினார்.

விடுதலை படத்தின் 2ம் பாகத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேலும், வாடிவாசல் படம் எப்போது தான் ஆரம்பிக்கும் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் வெற்றிமாறன் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் சம்பாதித்துள்ள சொத்துக்கள் குறித்த தகவலை இங்கே காணலாம் வாங்க..
பெயரிலேயே வெற்றி: கோடம்பாக்கத்திற்கு இயக்குநராகும் கனவுடன் வருபவர்கள் 10 ஆயிரம் பேர் என்றால் அதில், 100 பேர் மட்டுமே பாலுமகேந்திராவை தேர்வு செய்வார்கள். அவரிடம் பணியாற்றுவது ரொம்பவே கஷ்டம் என நினைத்தே அவர் பக்கம் வரமாட்டார்கள். அவருடைய பட்டறைக்கு சென்ற வெற்றிமாறனை அவர் பட்டைத் தீட்டிய நிலையில், தரமான படங்களை கொடுத்து தொடர்ந்து வெற்றி இயக்குநராகவே வெற்றிமாறன் வலம் வருகிறார்.

49வது பிறந்தநாள்: 1975ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி கடலூரில் பிறந்து வளர்ந்த வெற்றிமாறன் சினிமா மீது உள்ள ஆர்வம் காரணமாக சென்னை லயோலா கல்லூரியில் படித்தார். பாலுமகேந்திராவிடம் கற்ற பாடங்களை வைத்து பொல்லாதவன் படத்தை 2007ம் ஆண்டு தனுஷை வைத்து இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இன்று தனது 49வது பிறந்தநாளை வெற்றிமாறன் கொண்டாடி வரும் நிலையில், சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.
5 தேசிய விருதுகள்: பொல்லாதவன் படத்தைத் தொடர்ந்து மீண்டும் தனுஷ் உடன் இணைந்து வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்தது. சிறந்த திரைக்கதை ஆசிரியர் மற்றும் சிறந்த இயக்குநர் என 2 தேசிய விருதுகளை வெற்றிமாறன் அந்த படத்திற்காக வென்றார். விசாரணை சிறந்த படமாக தேசிய விருதை வென்றது. காக்கா முட்டை படத்தை தயாரித்து தேசிய விருதை பெற்றார் வெற்றிமாறன். அசுரன் படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதை அவருக்கு பெற்றுத் தந்தது.
சம்பளமும் சொத்து மதிப்பும்: இயக்குநர் வெற்றிமாறன் ஒரு படத்துக்கு 6 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் வெற்றிமாறன் நல்ல படங்களை வாங்கி வெளியிட்டும் சொந்த தயாரிப்பில் படங்களை தயாரித்தும் சம்பாதித்து வருகிறார். சுமார் 17 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குநராக வலம் வரும் வெற்றிமாறன் ஒட்டுமொத்தமாக 30 கோடி வரை சொத்துக்களை வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுவரை அவரது சொத்து மதிப்பு குறித்து அவர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இறுதியில் வெளியாகவுள்ள விசாரணை 2 மற்றும் அடுத்து தொடங்கவுள்ள வாடிவாசல் படமும் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications











