Vetrimaaran: இப்படி அடிக்கடி தொந்தரவு பண்ணாத... இளம் ஹீரோவை விரட்டிவிட்ட வெற்றிமாறன்

சென்னை: கோலிவுட்டின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார் வெற்றிமாறன்.

பொல்லாதவன் முதல் இறுதியாக வெளியான விடுதலை வரை வெற்றிமாறனின் படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் தான்.

 Vetrimaaran chased away Harish Kalyan, who had often asked for a chance

அதேபோல், வெற்றிமாறனின் பேவரைட் ஹீரோ என்றால் அது தனுஷ் தான் என்பது அனவருக்கும் தெரிந்த ஒன்றே.

இந்நிலையில், அடிக்கடி வாய்ப்புக் கேட்டு தொந்தரவு செய்த இளம் ஹீரோ ஒருவரை வெற்றிமாறன் விரட்டிவிட்ட சம்பவம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

இளம் ஹீரோவை விரட்டிவிட்ட வெற்றிமாறன்

பொல்லாதாவன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல், இந்தப் படத்தில் இருந்து வெற்றிமாறன் - தனுஷ் என்ற மேஜிக் காம்போ கோலிவுட்டையே மிரட்டி வருகிறது.

வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. அதேபோல், வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படத்தில் அட்டக்கத்தி தினேஷ் ஹீரோவாக நடித்திருந்தார். அதேபோல், கடந்த மார்ச் மாதம் ரிலீஸான விடுதலை படத்தில் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடித்திருந்தார். கதைக்கு தேவையென்றால் இதுபோல் ஹீரோ மெட்டீரியல் இல்லாத நடிகர்களையும் நாயகனாக நடிக்க வைத்திருந்தார்.

இதனால், பல இளம் ஹீரோக்கள் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க அதிக ஆர்வத்துடன் உள்ளனர். அப்படி ஒரு இளம் ஹீரோ, இயக்குநர் வெற்றிமாறனிடம் வாய்ப்புக் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்துள்ளாராம். ஆனால், எனது கதைக்குத் தேவைப்பட்டால் யாராக இருந்தாலும் கண்டிப்பாக கூப்பிடுவேன். தயவுசெய்து இப்படி அடிக்கடி வந்து தொந்தரவு செய்யாதே, தேவயென்றால் நானே கூப்பிடுகிறேன் போ என அந்த இளம் நடிகரை விரட்டியுள்ளார் வெற்றிமாறன்.

அது வேறு யாரும் இல்லை, ஹரிஷ் கல்யாண் தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. சிந்து சமவெளி திரைப்படத்தில் அமலா பால் ஜோடியாக அறிமுகமான ஹரிஷ் கல்யாண், பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு, ஓ மணப்பெண்ணே போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார். அதேபோல், தோனியின் தயாரிப்பில் உருவாகும் முதல் படமான Let's Get Married ஹீரோவும் ஹரிஷ் கல்யாண் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் பல முன்னணி இயக்குநர்களிடம் வாய்ப்புத் தேடிச் சென்றுள்ளார் ஹரிஷ் கல்யாண். அப்படித்தான் வெற்றிமாறனை பார்க்கும் போதெல்லாம் அவரிடம் தானாக போய் பேசுவதும் தேடிச் சென்று பூங்கொத்து கொடுத்தும் வாய்ப்புக் கேட்டுள்ளார். இதனால் கோபமான வெற்றிமாறன் எதற்கு தினந்தோறும் இப்படி என்னை வந்து தொந்தரவு செய்கிறார் என திட்டியுள்ளார். இப்படி வந்தால் தான் நீங்கள் என்னை மறக்க மாட்டீர்கள் என ஹரிஷ் கல்யாண் கூற, வெற்றிமாறன் அவரை விரட்டியடித்தாராம். இந்தச் சம்பவத்தை ஹரிஷ் கல்யாணே ஒரு பேட்டியில் சொன்னதாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X