வெற்றிமாறனின் விடுதலை படத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? காத்திருக்கும் திரைவிருந்து!

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் இறுதியாக தனுஷ் நடித்த அசுரன் 2019ம் ஆண்டு வெளியாகியிருந்தது.

அதன்பின்னர் அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் வரும் 31ம் தேதி ரிலீஸாகிறது.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி, சூரி லீடிங் கேரக்டரில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

 விடுதலை உருவான விதம்

விடுதலை உருவான விதம்

தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் தனுஷ் நடித்தால் அந்தப் படங்கள் பற்றி கேட்கவே வேண்டாம். வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் இறுதியாக அசுரன் திரைப்படம் கடந்த 2019ம் ஆண்டு வெளியானது. இதனைத் தொடர்ந்து சூரியை ஹீரோவாக நடிக்க வைக்க முடிவு செய்தார் வெற்றிமாறன். அப்படி உருவான திரைப்படம் தான் விடுதலை என்பது குறிப்பிடத்தக்கது.

 தடைகளை உடைத்த கூட்டணி

தடைகளை உடைத்த கூட்டணி

முதலில் சூரி நடிப்பில் 'பட்டாம்பூச்சி விற்பவன்' என்ற படத்தை இயக்கவிருந்தார். மறைந்த நா முத்துக்குமாரின் சிறுகதையை தழுவி இந்தப் படம் உருவாகவிருந்தது. ஆனால், இந்தப் படம் ஷூட்டிங் செல்லமுடியாமல் டிராப் ஆனதால், அடுத்ததாக எழுத்தாளர் மீரான் மைதீனின் புகழ்பெற்ற அஜ்னபி நாவலில் சூரியை ஹீரோவாக நடிக்க வைக்க வெற்றிமாறன் முடிவு செய்திருந்தார். கொரோனா காரணமாக இந்தப் படமும் எடுக்க முடியாமல் போகவே அடுத்ததாக முடிவானது தான் விடுதலை திரைப்படம். தொடர்ச்சியாக பல தடைகள் வந்தபோதும் வெற்றிமாறன் - சூரி கூட்டணி விடுதலை படத்தில் இணைந்தது.

 முதன்முறையாக இளையராஜா

முதன்முறையாக இளையராஜா

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை பின்னணியாக வைத்து விடுதலை திரைப்படத்தை இயக்க முடிவெடுத்தார் வெற்றிமாறன். அதேபோல் வழக்கமாக ஜிவி பிரகாஷ் குமாருடன் இசைக் கூட்டணி வைக்கும் வெற்றிமாறன், இந்தப் படத்திற்காக இளையராஜாவுடன் கை கோர்த்தார். அப்போதே விடுதலை படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது. மேலும், பாரதிராஜா நடிக்கவிருந்த கேரக்டரில் அவருக்குப் பதிலாக விஜய் சேதுபதியும் கமிட் ஆனார்.

 வழிநெடுக காட்டுமல்லி

வழிநெடுக காட்டுமல்லி

விடுதலை முதல் பாகத்தில் மொத்தமே 3 பாடல்கள் தான் என்பது உறுதியாகியுள்ளது. முதன்முறையாக இளையராஜா இசையில் தனுஷ் பாடிய 'ஒன்னோட நடந்தா' பாடல் இசை ரசிகர்களை மயக்கத்தில் கிறங்கடித்துவிட்டது. இது என்ன பிரமாதம் என கேட்கும் விதமாக அடுத்து வெளியானது இளையராஜாவும் அநன்யா பட்டும் பாடிய 'வழிநெடுக காட்டுமல்லி'. இப்பாடல் வெளியானது முதல் இசை ரசிகர்களின் இரவுநேர வழித்துணையாகிவிட்டது காட்டுமல்லி. அதோடு வள்ளலார் புகழ்பாடிய 'அருட்பெருஞ்ஜோதி' பாடலும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இணைந்துவிட்டது.

 விடுதலை 1 ட்ரெய்லர்

விடுதலை 1 ட்ரெய்லர்

விடுதலை படம் மினிமம் பட்ஜெட்டில் தொடங்கப்பட்டாலும் தனது மேக்கிங்கில் சிறிதும் சமரசம் செய்துகொள்ளவில்லை வெற்றிமாறன். அதுவே இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. கொடைக்கானல், ஈரோடு மாவட்டம் சிறுமலை பகுதிகளில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது படப்பிடிப்புகள் நடத்தப்பட்டன. அதன் ரிசல்ட்டை விடுதலை படத்தின் பாடல்கள், ட்ரெய்லரில் பார்க்க முடிந்தது. நேட்டிவிட்டியை கொஞ்சம் கூட சிதறவிடாமல் அள்ளி வந்துள்ளது ஆர் வேல்ராஜ்ஜின் கேமரா. ட்ரெய்லரிலும் பாடல்களிலுமே ரசிகர்களை சிலிர்க்க வைத்த இவரது ஒளிப்பதிவு, மொத்தப் படத்திலும் என்னவெல்லாம் மேஜிக் செய்திருக்குமோ என எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.

 இரண்டாவது பாகம்

இரண்டாவது பாகம்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வட சென்னை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என வெற்றிமாறன் கூறியுள்ளார். ஆனால், வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவான முதல் படம் என்ற பெருமை விடுதலைக்கு தான் கிடைத்துள்ளது. சூரி, விஜய் சேதுபதி, கெளதம் மேனன், ராஜீவ் மேனன் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர். முக்கிமாக இயக்குநர் ராஜீவ் மேனன் முதன்முறையாக நடிகராக அறிமுகமாகும் படமும் விடுதலை தான் என்பது குறிப்பிடத்தக்கது. கதையில் இருக்கும் முக்கியத்துவமே விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட காரணமாகியுள்ளது. இதனால் வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் கண்டிப்பாக ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெறும் என சொல்லப்படுகிறது.

 சூரி, விஜய் சேதுபதி

சூரி, விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி, சூரி இருவரது கேரியரிலும் இந்தப் படம் மிக முக்கியமானதாக இருக்கும் என சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். விடுதலை ட்ரெய்லரில் சூரியின் நடிப்பும் அவரது அர்ப்பணிப்பும் விருதுகளை வென்று கொடுத்தாலும் அதில் ஆச்சரியம் இல்லை எனலாம். சும்மாவே நடிப்பில் மிரட்டும் விஜய் சேதுபதி, இதில் வாத்தியாராக பலருக்கும் பாடம் எடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக தமிழ்த் திரையுலகில் விடுதலை படத்துக்கு சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும் என்பதே உண்மை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X