வெற்றிமாறனுக்கு சூர்யா போட்ட கண்டிஷன்கள்.. வாடிவாசல் மூடப்பட இதுவா காரணம்?
சென்னை: பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்து பொல்லாதவன் படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். இதுவரை ஆறு படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் பெரும் தாக்கத்தை சினிமா துறையினரிடமும், ரசிகர்களிடமும் விதைத்திருக்கிறார் அவர். கடைசியாக அவரது இயக்கத்தில் விடுதலை 2 திரைப்படம் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அவர் வாடிவாசல் படத்தை இயக்குவதாக கூறப்பட்ட சூழலில்; இப்போது படம் ட்ராப்பாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவரது முதல் படமான பொல்லாதவன் கமர்ஷியல் படமாக உருவாகியிருந்தது. ஆனால் அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய ஆடுகளம் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிஅய் விருதுகளை அள்ளியது. அந்தப் படத்திலிருந்து வெற்றிமாறன் தவிர்க்க முடியாத இயக்குநராகிவிட்டார். அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய விசாரணை, வடசென்னை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது.
வெற்றி சந்தித்த விமர்சனம்: வெற்றிமாறனின் படங்கள் பெரும்பாலும் விமர்சனத்தை சந்திக்காது. ஆனால் வடசென்னை படம் அதற்கு விதி விலக்காக அமைந்தது. பெரும்பாலானோருக்கு அந்தப் படம் பிடித்திருந்தாலும் ஒருதரப்பினரோ; வடசென்னை மக்களை வெற்றிமாறன் மோசமாக சித்தரித்துவிட்டார் என்று விமர்சனத்தை முன்வைத்தார்கள். இருந்தாலும் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இப்போதும் அந்தப் படத்தின் இரண்டாவது பாகத்துக்கு ரசிகர்கள் வெறித்தனமான வெயிட்டிங்கில் இருக்கிறார்கள்.

விடுதலை 2: அவரது இயக்கத்தில் கடைசியாக விடுதலை 2 திரைப்படம் வெளியானது. படத்தின் முதல் பாகம் எப்படி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததோ அதேபோல் இந்தப் படமும் ஹிட்டாகும் என்கிற நம்பிக்கை ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் இரண்டாவது பாகம் கொஞ்சம் கலவையான விமர்சனத்தைதான் பெற்றது. முக்கியமாக படம் முழுக்க பிரசார தொனி அதிகமாகவே அடித்ததாக பலரும் கூறினார்கள். அதேசமயம் படத்தின் வசனங்கள் அனைத்தும் தரமாக இருந்தது என்று ரசிகர்கள் பாராட்டவும் தவறவில்லை.
வாடிவாசல்: நாவல்களையும், சிறுகதைகளையும் படமாக்கும் முயற்சியில் வெற்றிமாறன் இப்போது தீவிரமாக இறங்கியிருக்கிறார். அப்படி அவர் இயக்கிய விசாரணை, அசுரன் ஆகிய படங்கள் இந்திய அளவில் கவனம் ஈர்த்தன. அதேபோல் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற குறுநாவலை அதே பெயரிலேயே வெற்றிமாறன் படமாக்கவிருக்கிறார். சூர்யா கதாநாயகனாக நடிக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தார்கள்.
வாடிவாசல் ட்ராப்?: மேலும் வெற்றிமாறன், சூர்யா, தாணு ஆகியோர் நேரில் சந்தித்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகி பயங்கரமாக ட்ரெண்டானது. ஆனால் கடந்த சில நாட்களாகவே ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் ட்ராப் செய்துவிட்டார் என்றும் அதற்கு பதிலாக சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்; அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் எனவும் கூறப்படுகிறது.
ஏன் ட்ராப்?: இந்நிலையில் வாடிவாசல் படம் ட்ராபானதற்கு, சூர்யா வெற்றிமாறனிடம் வாடிவாசல் படத்தின் முழு ஸ்க்ரிப்ட்டையும் கேட்டார். ஆனால் வெற்றியோ எப்போதுமே இறுதி செய்யப்பட்ட முழு ஸ்க்ரிப்ட்டை வைக்கமாட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென நல்ல சீன் ஏதேனும் தோன்றினால் அதை படமாக்குவதுதான் அவர் ஸ்டைல். எனவே இந்தப் படம் ட்ராப்பாக முதல் காரணம் இதுதான் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி இப்படத்தை ஒரு பாகத்தோடு முடித்துவிட வேண்டும் என்றும் வெற்றியிடம் சூர்யா சொன்னது இன்னொரு காரணம் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











