வெற்றிமாறனின் மனைவி, மகள் ட்ரெண்டிங் பாடலுக்கு கலக்கல் டான்ஸ்.. ஆஹா சூப்பரா ஆடுறாங்களே.. செம வீடியோ

சென்னை: இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இப்போது சிம்புவை வைத்து அரசன் படத்தை இயக்கிவருகிறார். விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அடுத்தக்கட்ட ஷூட்டிங் மார்ச் மாதத்தில் நடக்கவிருப்பதாக தெரிகிறது. நீண்ட நாட்கள் எதிர்பார்த்த கூட்டணி அமைந்திருப்பதால் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில் அவரது மனைவி ஆர்த்தியும், மகள் தென்றலும் கென் கருணாஸ் இயக்கத்தில் வரவிருக்கும் யூத் படத்தில் இடம்பெற்றிருக்கும் முட்ட கலக்கி பாடலுக்கு நடனமாடியிருக்கும் வீடியோ அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறது.

பாலுமகேந்திராவின் உதவி இயக்குநரான வெற்றிமாறன் தனது குருநாதர் போலவே இந்திய திரைத்துறையில் மிகச்சிறப்பான பெயரை பெற்றிருக்கிறார். இதுவரை பத்துக்கும் குறைவான படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் ஒவ்வொரு படமும் சமூகத்தில் பெரிய கவனத்தை ஈர்க்கக்கூடியவை. தனது படங்களில் சமூக நீதி தொடர்பான கருத்தையும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான கருத்தையும் தொடர்ந்து பலமாக பேசிக்கொண்டே இருக்கக்கூடியவர் அவர். ஆடுகளம், அசுரன் படங்களுக்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதையும் அவர் பெற்றிருக்கிறார்.

Vetrimaaran Family Goes Viral Wife Aarthi and Daughter Thenral s Dance Video Wins Hearts
Photo Credit:

அனைத்து நடிகர்களுக்கும் அதுதான் ஆசை: தமிழ் நடிகர்கள் மட்டுமின்றி மற்ற மொழி நடிகர்களுக்கும் இருக்கும் ஆசைகளில் ஒன்று எப்படியாவது வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்துவிட வேண்டும் என்பதுதான். ஏனெனில் அவர் படத்தில் நடித்துவிட்டால் போதும் கண்டிப்பாக நல்ல பெயரும், விருதும், புகழும் வந்துவிடும். பல நடிகர்கள் அப்படி ஆசைப்பட்டாலும் வெற்றியை பொறுத்தவரை தனது கதை கூறும் நடிகர்களைத்தான் தன்னுடைய படங்களில் நடிக்க வைப்பவர். யார் என்ன சொன்னாலும் அதற்காக கொஞ்சம்கூட காம்ப்ரமைஸ் செய்துகொள்ளமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் அவரிடம் பாராட்டப்படக்கூடிய ஒன்றாக கருதப்படுகிறது.

அரசன் வெற்றிமாறன்: கடைசியாக அவர் விடுதலை 2 படத்தை இயக்கியிருந்தார். அதில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அந்தப் படத்துக்கு பிறகு சிம்புவை வைத்து அரசன் படத்தை இயக்கிவருகிறார். இதில் சிம்புவுடன் விஜய் சேதுபதியும் நடித்துவருகிறார். படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்தது. அடுத்தக்கட்ட ஷூட்டிங் மதுரையில் நடக்கவிருப்பதாக தெரிகிறது. அப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டார் என்று வெளியான தகவலை சமீபத்தில்தான் சேது மறுத்திருந்தார். மார்ச்சில் நடக்கும் ஷூட்டிங்கில் அவர் கலந்துகொள்வார் என கூறப்படுகிற்து.

வெற்றிமாறனின் குடும்பம்: வெற்றிமாறனுக்கு காதல் திருமணமாகும். நீண்ட வருடங்கள் காதலித்த ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பூந்தென்றல் என்ற மகளும், அகரன் என்ற மகனும் இருக்கிறார்கள். வெற்றியின் குடும்பத்தினர் சில வருடங்களுக்கு முன்பு வரை பொதுவெளிகளில் அதிகம் வராமல் இருந்தார்கள். ஆனால் சமீப காலமாக அவரது மனைவி ஆர்த்தி சோஷியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவ்வாக இருந்துவருகிறார்.

ட்ரெண்டிங் பாடலுக்கு நடனம்: இந்நிலையில் கென் கருணாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் யூத் படத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் இடம்பெற்றிருக்கும் 'முட்டை கலக்கி' என்ற பாடலுக்கு தனது மகள் பூந்தென்றலுடன் அட்டகாசமாக நடனம் ஆடியிருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள், அட இவ்வளவு சூப்பராக நடனம் ஆடுகிறாரே. அப்படியே மகனையும் ஆட வைத்திருக்கலாம் என கமெண்ட்ஸ் செய்து ட்ரெண்டாக்கிவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X