Vetrimaaran - சவுக்கு சங்கர் வாழ்க்கை வரலாறு படமாகிறதா?.. வெற்றிமாறன் சொல்லிய பதில்
சென்னை: Vetrimaaran (வெற்றிமாறன்) சவுக்கு சங்கரின் வாழ்க்கை வரலாறு படமாகிறதா என்பதற்கு வெற்றிமாறன் பதிலளித்திருக்கிறார்.
இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவரது முதல் படமான பொல்லாதவன் கமர்ஷியல் படமாக உருவாகியிருந்தது. ஆனால் அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய ஆடுகளம் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அள்ளியது. அந்தப் படத்திலிருந்து வெற்றிமாறன் தவிர்க்க முடியாத இயக்குநராகிவிட்டார்.

தவறாக சித்தரித்த வெற்றிமாறன்?: அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய விசாரணை, வடசென்னை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் வடசென்னை படம் வட சென்னைவாசிகளை தவறாக சித்தரித்துவிட்டதென்று விமர்சனமும் எழுந்தது. ஆனால் அதெல்லாம் இல்லை சரியாகத்தான் பேசியிருக்கிறார் என்றும் வெற்றிமாறனின் ரசிகர்கள் ஒருபக்கம் பேசினர்.
அசுரன் வெற்றிமாறன்: முதல் மூன்று படங்களிலேயே உச்சம் சென்றாலும் வெற்றிமாறன் அசுரன் படம் மூலம் சமூகத்தில் பஞ்சமி நிலம் குறித்து மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கி வைத்தார். அதுமட்டுமின்றி நாவலை மையமாக வைத்து வெற்றிப்படங்களை கொடுக்கலாம் என்ற ஃபார்முலாவையும் அனைவரிடமும் கொண்டு சேர்த்தார். அசுரன் படம் வெக்கை என்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது.
விடுதலை: இதனையடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படம் இயக்குவதற்கும், விஜய் சேதுபதி, சூரியை வைத்து விடுதலை படத்தை இயக்குவதற்கும் கமிட் ஆனார். வாடிவாசல் படம் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் குறுநாவலையும், விடுதலை படம் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையையும் அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலை 2: இந்தச் சூழலில் விடுதலை படத்தின் இரண்டாம் பாக ஷூட்டிங் ஏற்கனவே முடிந்தாலும் பாகம் ஒன்று பெற்ற விமர்சனம் இதில் வரக்கூடாது என்பதற்காக படத்தில் மேலும் சில காட்சிகளை படமாக்குகிறார் வெற்றி. இதில் விஜய் சேதுபதிக்கு மஞ்சு வாரியர் ஜோடியாக நடிக்கலாம் என கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே அசுரன் படத்தில் நடித்திருந்தார்.
சவுக்கு சங்கர்: நிலைமை இப்படி இருக்க சவுக்கு சங்கரின் வாழ்க்கையை படமாக வெற்றிமாறன் எடுக்கப்போகிறார் என்ற தகவல் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த சூழலில் அவர் சவுக்கு சங்கர் ஆரம்பித்திருக்கும் மீடியாக்கள் தொடக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அப்போது அவரிடம் வடசென்னை 2 எப்போது வரும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீக்கிரமே வரும் என்றார். அதேபோல் சவுக்கு சங்கர் வாழ்க்கை வரலாறு படமாக வருமா என கேட்டதற்கு ஆம் அதுவும் வரும் என்றார்.


Click it and Unblock the Notifications











