இதுல என்ன பெருமை.. 15 மடங்கு பட்ஜெட்டை உயர்த்திய வெற்றிமாறன்.. செம கேஷுவலா சொல்றாரே!

சென்னை: சூரி, விஜய்சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான விடுதலை படத்தின் பட்ஜெட் ஆரம்பத்தில் சொன்னது ஒன்று என்றும் முடிக்கும் போது அதன் பட்ஜெட் பல மடங்கு உயர்ந்து விட்டதாகவும் வெற்றிமாறன் சமீபத்திய பேட்டியில் செம கேஷுவலாக பேசியது கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

சூரியை ஹீரோவாக வைத்து வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் விஜய்சேதுபதி கேமியோவாக நடிக்க உள்ளார் எனக் கூறப்பட்டது.

Vetrimaaran hikes Viduthalai budget more than 15 times higher shocks fans

அதன் பின்னர், விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் எக்ஸ்டன்ட் ஆனது மட்டுமின்றி கடைசியில் படத்தின் ஹீரோவாகவே அவர் மாறிவிட்டார். அவருக்காக இரண்டாம் பாகத்தையும் எடுத்து வருகிறார் வெற்றிமாறன்.

எகிறிய பட்ஜெட்: வெறும் 4.5 கோடி ரூபாய் செலவில் சூரியை வைத்து படம் இயக்கித் தருகிறேன் என அறிவித்த வெற்றிமாறன் விடுதலை படத்தை அதிகபட்சமாக 65 கோடி ரூபாய் செலவு செய்து எடுத்ததாக சமீபத்திய பேட்டியில் சிரித்துக் கொண்டே கேஷுவலாக சொல்வதை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி இதில் பெருமைப்பட ஒன்றும் இல்லை வெற்றிமாறன் சார் என திட்டி வருகின்றனர்.

தயாரிப்பாளருக்கு நஷ்டம்: விடுதலை திரைப்படம் 65 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு 100 கோடி வசூல் ஈட்டியிருந்தால் கூட சரி என்று கூறலாம். அந்த படம் வெறும் 40 கோடி மட்டுமே வசூல் செய்ததாகவும், இதனால் தயாரிப்பாளருக்குத் தானே பெரிய நஷ்டம். தயாரிப்பாளரின் இயக்குநராக இல்லாமல் வெற்றிமாறன் இப்படி 15 மடங்கு அதிகமாக பட்ஜெட்டை உயர்த்தி இருப்பது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இரண்டாம் பாகம்: அதை சரி கட்டவே விடுதலை 2ம் பாகத்தை எடுக்கிறேன் என சொல்லி விட்டு இந்த படத்துக்கு தனியாக இன்னமும் ஷூட்டிங் செய்து மேலும், செலவை இழுத்துக் கொண்டே வெற்றிமாறன் செல்கிறாரா என்றும் இரு படங்களுக்கும் ஆன மொத்த செலவை சொல்கிறாரா? என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.

வாடிவாசல் என்ன ஆகும்?: விடுதலை படத்திற்கே இந்த நிலைமை என்றால் சூர்யா, அமீரை வைத்து வெற்றிமாறன் இயக்கப் போகும் வாடிவாசல் படத்தின் நிலைமை என்ன ஆகும் என்றும் வடசென்னை திரைப்படம் இதன் காரணமாகத்தான் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகவில்லையா? என்றும் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X