பிரகாஷ்ராஜ் எனக்கு சாபம் கொடுத்தார்…ஓர் இரவு குறித்து வெற்றிமாறன் பேட்டி!
சென்னை: கடந்த வாரம் Netflix-ல் வெளியான பாவ கதைகள் பல பாராட்டுகளை பெற்று வருகிறது.
இயக்குனர்களும், நடிகர்களும் தங்கள் பணியை சிறப்பாக செய்ததற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பாவ கதைகள் (ஓர் இரவு) குறித்து வெற்றிமாறன் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ் சாபம்
நடிகர்களை அழுத்தமான காட்சிகளில் நடிக்க வைக்கும் எனக்கும் (வெற்றிமாறன்), மணிரத்தினத்திற்கும் அடுத்த ஜென்மத்தில் மிளகாய் மண்டியில் பல்லியாக பிறக்க வேண்டும் என பிரகாஷ்ராஜ் சாபம் அளித்ததாக வெற்றிமாறன் அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். அந்த அளவிற்கு அழுத்தமான காட்சியாக இருந்தது கிளைமாக்ஸ்.

பாராட்டிய வெற்றிமாறன்
ஓர் இரவு பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சி நடித்த மறுநாள் காலை நடிகர் பிரகாஷ்ராஜ் அதை நினைத்து அரை மணி நேரம் அழுததாக பிரகாஷ் ராஜின் மனைவி தன்னிடம் கூறியதாகவும் அந்த அளவிற்கு காட்சியை உள் வாங்கி நடிக்க கூடியவர் பிரகாஷ்ராஜ் எனவும் வெற்றிமாறன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பாராட்டியுள்ளார்.

வெற்றிமாறனின் பகுத்தறிவு
அசுரன் திரைப்படத்தில் "படிப்பை மட்டும் நம்ம கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது " என்ற வசனம் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதியும் விதத்தில் இருக்கும். அதுபோல ஓர் இரவு பாகத்தில் வரும் "நல்லா படிச்சா உனக்கு உன்னோட சுதந்திரம் கிடைக்கும்" என்ற வசனமும் வெற்றிமாறனின் பகுத்தறிவை சிறப்புற காமிக்கிறது.

நேர்த்தியான நடிப்பு
ஓர் இரவு பாகத்தில் சாய் பல்லவி, பிரகாஷ் ராஜின் நடிப்பு பாராட்டுகளை பெற்ற வண்ணம் உள்ளது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் சாய் பல்லவியின் நடிப்பும், பேசும் வசனங்களும் ரசிகர்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்த கூடிய வகையில் அமைந்துள்ளது. அந்த அளவிற்கு நேர்த்தியான நடிப்பை சாய் பல்லவி, பிரகாஷ் ராஜ் வெளிப்படுத்தி உள்ளனர்.


Click it and Unblock the Notifications