சூரி படத்திற்கு சிவாஜி–ரஜினி பட டைட்டிலை தேர்வு செய்த வெற்றிமாறன்
சென்னை : தனுஷ் நடித்த 'அசுரன்' படம், சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்ற பிறகு அனைவராலும் கவனிக்கப்படும் டைரக்டர் ஆகி விட்டார் வெற்றிமாறன். இவரது அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

தற்போது எழுத்தாளர் ஜெயமேகனின் சிறுகதையான 'துணைவன்' கதையை மையமாக வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சூரி ஆகியோர் நடிக்க உள்ளனர்.

லேட்டஸ்ட் தகவலின்படி, சூரி முழு நேர ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை வெற்றி மாறன் தான் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு 'விடுதலை' என டைட்டில் வைக்க வெற்றிமாறன் நினைத்துள்ளார்.
ஏற்கனவே 'விடுதலை' என்ற பெயரில் 1986 ல் சிவாஜி, ரஜினி நடித்த படம் வெளிவந்துள்ளது. இதில் விஷ்ணுவர்தன் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். இந்த ஹிட் படத்தின் டைட்டிலை மீண்டும் பயன்படுத்த வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன் புத்தகங்களை தழுவி எடுத்த படங்களின் பெயர்களை வெற்றி மாறன் மாற்றி உள்ளார். 'லாக்அப்' என்ற கதையை 'விசாரணை' என்ற பெயரிலும், 'வேட்கை' என்ற கதையை 'அசுரன்' எனவும் எடுத்தார். இதே போல் அடுத்த படத்திற்கு எந்த மாதிரி டைட்டில் வைக்க போகிறார் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











