வெற்றிமாறன் மீது கோபத்தில் இருக்கிறாரா சூர்யா?.. வாடிவாசல் படத்தில் டோலிவுட் ஹீரோ நடிக்கப் போறாரா?

சென்னை: நடிகர் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிப்பாரா? மாட்டாரா? என்கிற சிக்கல் மீண்டும் கிளம்பியிருப்பதாக திரை வட்டாரத்தில் பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. ஏற்கனவே வணங்கான் படத்தை அறிவித்து விட்டு அந்த படத்தை தயாரிக்கவும் முன் வந்த சூர்யா திடீரென பாலாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக படத்தில் இருந்து மொத்தமாக விலகினார்.

அருண் விஜய்யை வைத்து உருவான வணங்கான் திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகி விடும் என தெரிகிறது. பாலாவை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க ஒப்புக் கொண்ட வாடிவாசல் படம் பல ஆண்டுகளாக இழுபறியாகவே இழுத்துக் கொண்டிருக்கிறது.

Vetrimaaran plans to rope Ram Charan in Vaadivaasal

இந்நிலையில், வெற்றிமாறன் சூர்யாவை கழட்டிவிட்டு வாடிவாசல் படத்தில் வேறு ஒரு டோலிவுட் நடிகரை நடிக்க வைக்க சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தீபாவளிக்கு கங்குவா: வாடிவாசல் படத்தை அறிவித்து விட்டு வணங்கான் படத்துக்கு சூர்யா சென்ற நிலையில், வெற்றிமாறன் சூரியை வைத்து விடுதலை படத்தின் 2 பாகங்களையும் எடுத்து முடித்துள்ளார். வணங்கான் படத்தில் இருந்து விலகிய சூர்யா வாடிவாசல் படத்தை ஆரம்பிக்காமல் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீபாவளிக்கு வருவது உறுதி என தகவல்கள் வெளியாகி உள்ளன. சிஜி பணிகள் ஆகஸ்ட் மாதம் தான் நிறைவடையுமாம்.

வாடிவாசலில் இருந்து விலகப் போறாரா?: சூர்யா தான் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என தயாரிப்பு தரப்பு உறுதியாக தெரிவித்து வந்த நிலையில், தற்போது சூர்யாவால் ஏற்படும் கால தாமதத்தை பார்த்து யாரை வைத்தாவது அந்த படம் உருவானால் போதும் என்கிற நிலைக்கே தயாரிப்பாளர் தாணு வந்திருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மேலும், விடுதலை 2 ஷூட்டிங்கை முடித்த வெற்றிமாறன் விரைவில் வாடிவாசல் படத்தை ஆரம்பிக்கும் முயற்சியில் இருப்பதாக கூறுகின்றனர்.

ராம்சரணுடன் பேச்சுவார்த்தை: சூர்யாவுக்கு பதிலாக தனுஷ் நடிக்கப் போவதாக சில பேச்சுக்கள் அடிபட்டன. இந்நிலையில், டோலிவுட் நடிகர் ராம்சரணிடம் ரகசியமாக வெற்றிமாறன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து பல வருடத்தை வீணடித்ததே போதும்டா சாமி என நினைத்துக் கொண்டிருக்கும் ராம்சரண் வெற்றிமாறன் குறித்து விசாரித்தாரோ என்னவோ தெரியவில்லை. அவரை அவாய்டு செய்து விட்டதாக கூறுகின்றனர். ஏற்கனவே ஷாருக்கானும் வெற்றிமாறனை கழட்டி விட்டு அட்லீயை டிக் செய்து ஜவான் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. கமர்ஷியல் ஹீரோக்களுக்கும் வெற்றிமாறனுக்கும் ஏதோ கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆவதில்லை போல தெரிகிறது.

சூர்யா கோபம்: ராம்சரணை சந்தித்து வெற்றிமாறன் பேசிய தகவல்கள் எப்படியோ சூர்யாவின் காதுகளுக்கு சென்று விட்டதாம். அதனால், அவர் செம கடுப்பில் இருப்பதாகவும் வேறு நடிகரை வைத்து படம் பண்ணுங்க நான் கார்த்திக் சுப்புராஜ், கர்ணன் படங்களில் பிசியாக போகிறேன் என இப்போதைக்கு வாடி வாசலுக்கு எண்ட் கார்டு போட்டு இருப்பதாக கூறுகின்றனர். வெற்றிமாறன் வேறு ஏதாவது படத்தை ஆரம்பிப்பாரா? அல்லது வாடிவாசல் படத்தை வேறு நடிகரை வைத்து ஆரம்பிப்பாரா? என்பது சீக்கிரமே தெரிந்து விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X