Vetrimaaran - அதுக்கு எதுக்குங்க நான்.. ஹிந்தி வாய்ப்பை உதறி தள்ளிய வெற்றிமாறன்

சென்னை:Vetrimaaran (வெற்றிமாறன்) ஹிந்தியில் படம் இயக்கும் வாய்ப்பை இயக்குநர் வெற்றிமாறன் வேண்டாம் என்று ஒதுக்கிய சம்பவம் தெரியவந்திருக்கிறது.

பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் வெற்றிமாறன். பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி சினிமாவின் நெளிவு சுளிவுகளை அறிந்தவர். அதனால்தான் முதல் படத்தில் எப்படியாவது தப்பித்துவிட வேண்டுமென்று முதல் படத்தை கமர்ஷியலாக எடுத்தார். அந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் தனுஷின் கரியரில் சிறந்த படங்களில் ஒன்றாக பொல்லாதவனும் இருக்கிறது.

Vetrimaaran Refuses Bollywood Movie chance for one Reason

ஆடுகளம்: பொல்லாதவன் படத்துக்கு பிறகு ஆடுகளம் படத்தை இயக்கினார் வெற்றிமாறன். முழுக்க முழுக்க மதுரையை பேக் ட்ராப்பாக வைத்து சேவல் சண்டைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அப்படம் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அள்ளி வந்தது. இந்தப் படம்தான் வெற்றிமாறனின் க்ராஃப்பை உச்சத்திற்கு கொண்டு போய் நிறுத்தியது. இதனையடுத்து இந்தியா முழுவதும் அறியப்படும் இயக்குநராக மாறினார் வெற்றி.

நாயகனைவிட கதைதான் முக்கியம்: இரண்டு படங்கள் வெற்றி பெற்றுவிட்டாலே முன்னணி ஹீரோவோடு பணியாற்ற வேண்டுமென்பதுதான் இயக்குநர்களின் ஆவலாக இருக்கிறது. ஆனால் வெற்றிமாறன் அப்படி இல்லை. கதை யாரை கேட்கிறதோ அவரை நோக்கிதான் செல்வார். அப்படித்தான் ஆடுகளத்தை முடித்துவிட்டு விசாரணை படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. தொடர்ந்து அவர் இயக்கிய வடசென்னை, அசுரன் படங்களும் ஹிட்டாகின.

விவாதத்தை கிளப்பிய அசுரன்: வெற்றிமாறன் இயக்கிய படங்களிலேயே மிக மிக முக்கியமான படம் அசுரன். பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக வைத்து அந்தப் படம் உருவானது. வெறும் வெக்கை நாவலை அப்படியே படமாக்காமல் அதில் பஞ்சமி நிலம் குறித்த விஷயங்களை சேர்த்திருந்தார் வெற்றிமாறன். படம் அதிரிபுதிரி ஹிட்டடித்து தேசிய விருதை வென்றது. மேலும் பஞ்சமி நிலம் தொடர்பான விவாதத்தையும் சமூகத்தில் கிளப்பியது கவனிக்கத்தக்கது.

ஹிந்தி வாய்ப்பு: அசுரன் படத்தை பார்த்த பிறகு பல மொழிகளில் ரீமேக் செய்ய பலர் விரும்பினர். அப்படித்தான் ஹிந்தியிலிருந்து முக்கியமான கதாநாயகர்கள் அசுரனை ரீமேக் செய்துவிட துடித்தனர். ஆனால் அவர்களுக்கு இருந்தது ஒரே ஒரு கண்டிஷன்தான். அது அசுரன் ஹிந்தி ரீமேக்கை வெற்றிமாறனே இயக்க வேண்டும் என்பதுதான்.

Vetrimaaran Refuses Bollywood Movie chance for one Reason

ஆனால் எடுத்த படத்தையே மீண்டும் எடுபதற்கு நான் எதுக்குங்க. வேறு யாரையாவது வைத்து டைரக்ட் பண்ணிக்க சொல்லுங்க என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் பிடிவாதமாக மறுத்துவிட்டாராம் வெற்றிமாறன். சில படங்கள் ஹிட்டானாலே அதை ஹிந்தியில் ரீமேக் செய்து பெயர் வாங்கிவிட வேண்டும் என்று நினைக்கும் இயக்குநர்கள் மத்தியில்; இயக்கிய படத்தை மீண்டும் எதற்காக இயக்க வேண்டும் என்ற வெற்றிமாறனின் இந்த துணிச்சலான செயல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விடுதலை வெற்றிமாறன்: வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் விடுதலை படம் வெளியானது. சூரி கதையின் நாயகனாக நடித்திருந்தார். படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதற்கு அடுத்ததாக கலைப்புலி தாணு தயாரிப்பில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை தொடங்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X