twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கருணாஸ் கோரிக்கை.. உடனே நிறைவேற்றிய வெற்றிமாறன்.. அசுரனில் இருந்து சர்ச்சைக்குரிய வசனம் நீக்கம்..!

    நடிகர் கருணாஸ் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அசுரன் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய வார்த்தையை நீக்கியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.

    |

    Recommended Video

    ASURAN FDFS PUBLIC REVIEW | DHANUSH | VETRIMARAN | FILMIBEAT TAMIL

    சென்னை: நடிகர் கருணாஸ் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அசுரன் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய வார்த்தையை படக்குழு நீக்கி விட்டது.

    கடந்த வாரம் ரிலீசான அசுரன் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மீண்டும் தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. முதல் இரண்டு நாட்களில் மட்டும் 10 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.

    Vetrimaaran removed controversial dialogue on Karunas request

    இந்நிலையில் இந்த படத்தில் வரும் ஆண்டபரம்பரை என்கிற வார்த்தையை நீக்க வேண்டும் என நடிகர் கருணாஸ் வலியுறுத்தினார்.

    "ஆண்டபரம்பரை நாங்கதான். முக்குலத்தோர் சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ள காட்சியை நீக்கவேண்டும்" என அவர் கூறியிருந்தார்.

    கருணாஸின் இந்த கோரிக்கையைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வார்த்தையை படத்தில் இருந்து நீக்கிவிட்டது அசுரன் படக்குழு. இதற்கு கருணாஸ் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

    கருணாஸின் மகனும் இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Director Vetrimaaran had removed controversial caste related dialogue from his film Asuran based on the request from actor and politician Karunas.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X