வடசென்னை 2ம் பாகத்தை இப்படி ரிலீஸ் செய்ய வெற்றிமாறன் யோசனை.. ரசிகர்கள் சம்மதிப்பார்களா?

சென்னை: வடசென்னை 2ம் பாகத்தை வெப்சீரிஸாக வெளியிட இயக்குநர் வெற்றிமாறன் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

May Release Jagame Thandhiram | Mookuthi Amman | Dhanush | Nayanthara

கோலிவுட்டில் விஜய், அஜித், சூர்யாவுக்கு அடுத்தபடியாக அதிகளவில் ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகர் என்றால் அது நம்ம தனுஷ் தான்.

வெற்றிமாறன் - தனுஷ் காம்போ என்றாலே சொல்லவே தேவையில்லை அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் தான்.

வடசென்னை விவகாரம்

வடசென்னை விவகாரம்

ஆனால், பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான வடசென்னை படத்திற்கு திடீரென கிளம்பிய எதிர்ப்புகளால், அதன் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் வெளியாகுமா? இல்லையா? என்ற சந்தேகமே எழுந்து நிற்கிறது. அதற்கு முக்கிய காரணம் வடசென்னை மக்களை ரவுடிகளாகவும், கொலைகாரர்களாகவும், கெட்ட வார்த்தை பேசுபவர்களாகவும் சித்தரித்ததே.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

வடசென்னை படம் வெளியான உடன், அதுவரை இல்லாத அளவுக்கு வெற்றிமாறன் படத்திற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்தன. வடசென்னை மக்கள் மனதை புண்படும் படி எடுக்கப்பட்ட காட்சிகளை நீக்கவும், இயக்குநர் அமீர் மற்றும் ஆண்ட்ரியா நடித்த ஆபாச காட்சியை மாற்றவும் எதிர்ப்பு குரல் கிளம்பியது.

வெற்றிமாறன் மன்னிப்பு

வெற்றிமாறன் மன்னிப்பு

தொடர்ந்து எதிர்ப்புகள் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் பகிரங்கமாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி மன்னிப்பும் கோரினார். சில காட்சிகள் நீக்கப்பட்டன. ஆபாச வசனங்கள் சில மியூட் செய்யப்பட்டன. இதன் காரணமாக வடசென்னை படத்தின் அடுத்த பாகங்களை இயக்கும் ஆர்வம் முற்றிலுமாக வெற்றிமாறனிடம் இருந்து சென்று விட்டதாக செய்திகள் வெளியாகின.

வேற படம்

வேற படம்

வடசென்னை படம் மேக்கிங் அளவில் சிறந்த படமாகவே இருந்தாலும், இதுபோன்ற சர்ச்சைகளால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தேசிய விருதும் கிடைக்கவில்லை. இந்நிலையில், உடனடியாக மீண்டும் தனுஷை வைத்து வெற்றிமாறன் பூமணியின் வெக்கை நாவலை அசுரன் படமாக இயக்கி அசத்தி இருந்தார்.

வெப் சீரிஸ்

வெப் சீரிஸ்

இருந்தாலும், வடசென்னை இரண்டாம் பாகம் மீது ரசிகர்களுக்கும், இயக்குநர் வெற்றிமாறனுக்கு யோசனை இருந்து கொண்டு தான் இருக்கிறது. வடசென்னை 2 படத்தை இயக்க கால தாமதம் ஆனாலும், அந்த படத்தை இயக்கும் திட்டமும், அதனை வெப் சீரிஸாக வெளியிடும் திட்டத்தையும் வெற்றிமாறன் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூரி, சூர்யா

சூரி, சூர்யா

அசுரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காமெடி நடிகர் சூரியை வைத்து ஒரு படத்தையும், சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தையும் இயக்க உள்ளார். அதே சமயம் நடிகர் தனுஷ் அரை டஜன் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து படு பிசியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. வடசென்னை 2 வெப்சீரிஸாக வெளியானால் தனுஷுக்கு பதில் வேறு ஒரு நடிகரும் நடிக்க வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X