காமெடி சூரி ஹீரோவாகும் படத்தின் அரபு ஷூட்டிங், அப்படியே வெயிட்டிங்! இந்த பீதிதான் காரணம்னு சொல்றாங்க
சென்னை: சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தின் வெளிநாட்டு ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Recommended Video
தனுஷ், மஞ்சுவாரியர், பசுபதி, கென் கருணாஸ் உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், அசுரன்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜி.வி.பிரகாஷ்ராஜ் இசை அமைத்திருந்தார்.

நூறாவது நாள் விழா
எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் நூறு நாட்களை கடந்து ஓடியது. சென்னையில் இதன் வெற்றி விழாவை நடத்தி இருந்தனர். நீண்ட நாளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நடந்த நூறாவது நாள் விழா இது என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து சூரி நடிக்கும் படத்தை இயக்குகிறார் வெற்றி மாறன்.

எல்ரெட் குமார்
இந்தப் படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே, விண்ணைத்தாண்டி வருவாயா?, கோ, நீதானே என் பொன்வசந்தம், யாமிருக்க பயமேன் உட்பட சில படங்களை தயாரித்துள்ளார். முப்பொழுதும் உன் கற்பனைகள் என்ற படத்தை இயக்கியும் உள்ளார்.

அரபு நாடுகளில்
சூரி நடிக்கும் படத்தின் கதை, வெளிநாட்டில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களின் நிலையை சொல்லும் படமாம். இதன் படப்பிடிப்பு கத்தார், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் நடக்க இருந்தது. இதற்காக சிறப்பு அனுமதியை படக்குழு வாங்கி இருந்தது.

கொரோனா வைரஸ்
இந்த மாதம் முதல் வாரத்தில் அங்கு படப்பிடிப்புக்கு செல்ல முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக, படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் உகானில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அடுத்தடுத்து பரவி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாடிவாசல்
இந்த படத்தை முடித்த பின் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார், இயக்குனர் வெற்றி மாறன். இதை, அசுரனை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். சி.சு.செல்லப்பாவின் நாவலை மையமாகக் கொண்ட இந்தப் படத்தின் கதை ஜல்லிக்கட்டை பற்றியது.


Click it and Unblock the Notifications











