நீங்கள் சினிமாவில் ஜொலிக்க வேண்டுமா?.. வெற்றிமாறன் ஆரம்பித்துள்ள இலவச பயிற்சி திட்டம்!
சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் கிராமப்புற மாணவர்களும் சினிமாவில் சாதிக்க ஒரு புதிய திட்டத்தை தொடங்கி உள்ளார்.
சர்வதேச திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனம் எனும் அமைப்பை கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி தொடங்கினார் இயக்குநர் வெற்றிமாறன்.
கொரோனா காரணமாக அதன் சேர்க்கை பணிகள் தாமதமான நிலையில், தற்போது மாணவர் சேர்க்கைக்கான தேர்வு நடத்தும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கிராமப்புற மாணவர்களுக்கும் சினிமா
சினிமாவை கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் சென்னைக்கு கிளம்பி வந்தால் தான் உண்டு எனும் நிலை இன்னமும் நீடித்து வருவதால் பல திறமையான கிராமப்புற மாணவர்கள் சினிமாவில் அடியெடுத்து வைக்க முடியாமல் தவிக்கின்றனர். அவர்களின் தவிப்பை போக்கும் விதமாக இயக்குநர் வெற்றிமாறன் ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளார்.
வெற்றிமாறன் பயிற்சி நிறுவனம்
சர்வதேச திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனம் (International Institute of Film and Culture - IIFC) எனும் அமைப்பை கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி இயக்குநர் வெற்றிமாறன் ஆரம்பித்தார். அதன் வழிகாட்டியாக ராஜநாயகம், செயல் தலைவராக வெற்றி துரைசாமி உள்ளிட்டோர் கிராமப்புற மாணவர்களுக்கு சினிமாவை எட்டும் கனியாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.

இலவச பயிற்சி
திருச்சி, மதுரை, திருப்பூர், திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் இருந்து 5 சுற்று சேர்க்கை செயல்முறையின் ஒரு பகுதியாக, சுற்று 2 (எழுத்து தேர்வு) தமிழகம் முழுவதும் 5 இடங்களில் வரும் ஆக்டோபர் 24ம் தேதி நடத்தப்படுகிறது. ஏழை மாணவர்கள் சினிமாவில் சாதிக்க இந்த ஓராண்டு பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

40 பேருக்கு வாய்ப்பு
கொரோனா காரணமாக எழுத்து தேர்வு தள்ளிப் போன நிலையில், தற்போது 3 மணி நேரம் நடைபெற உள்ள எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்புகள் https://www.iifcinstitute.com/ எனும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 1450 மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்த தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுக்கும் 40 பேருக்கு சினிமா பயிற்சி, உணவு மற்றும் தங்குமிடம் என அனைத்துமே இலவசமாக கொடுக்க வெற்றிமாறன் முடிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











