பாரதி ராஜா, சூரி நடிப்பில்.. எழுத்தாளர் ஜெயமோகன் கதையை படமாக்குகிறார் இயக்குனர் வெற்றிமாறன்!

By

சென்னை: வெற்றிமாறன் இயக்கும் அடுத்தப் படம் ஜெயமோகன் எழுதிய கதையில் இருந்து உருவாகிறது.

தனுஷ், மஞ்சு வாரியர் நடித்த 'அசுரன்' ஹிட்டுக்குப் பிறகு, அடுத்தப் படத்தை தொடங்க இருந்தார் வெற்றிமாறன்.

சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை அவர் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

குளறுபடிகள் நடந்தன

குளறுபடிகள் நடந்தன

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டதால் பல குளறுபடிகள் நடந்தன. இதனால், சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை விட்டுவிட்டு, சூரி நடிக்கும் படத்தை இயக்க வெற்றிமாறன் முடிவு செய்தார். அதற்கு முன்பாக, பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார், சூர்யா.

அரபு நாடு கதை

அரபு நாடு கதை

அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதற்கிடையே, முதலில் நா.முத்துக்குமாரின் கவிதை ஒன்றை கதையாக்கி சூரி நடிப்பில் படமாக்க இருந்தார், வெற்றிமாறன். அது அரபு நாடொன்றில் வேலைபார்க்கும் ஒருவரின் கதை. துபாய்க்கு ஷூட்டிங் செல்ல இருந்த நிலையில்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

கதையை மாற்றினார்

கதையை மாற்றினார்


இதனால், வெளிநாடு சென்று படமாக்கும் வாய்ப்பில்லை என்பதால், சூரி நடிக்கும் படத்தின் கதையை மாற்றினார் வெற்றிமாறன். சிறுகதை மற்றும் நாவல்களை படமாக்குவதில் அதிக ஆர்வம் கொண்டவர் அவர். லாக்கப் நாவலை, விசாரணை என்ற பெயரில் படமாக்கிய அவர், வெக்கை நாவலை 'அசுரன்' ஆக்கினார்.

ஜெயமோகன் சிறுகதை

ஜெயமோகன் சிறுகதை

வாடிவாசல் நாவலை அதே பெயரில் படமாக்க இருக்கிறார். இந்நிலையில், இப்போது எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதை ஒன்றைப் படமாக்குகிறார். இந்த சிறுகதை பல வருடங்களுக்கு முன் வார இதழ் ஒன்றில் வெளியானது. இதில், நடிகர் சூரி போலீஸ்காரராகவும், பாரதிராஜா புரட்சியாளராகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

Recommended Video

சமுத்திரகனி சொன்னா மக்கள் கேப்பாங்க | SANGATHALAIVAN AUDIO LAUNCH | FILMIBEAT TAMIL
திட்டமிட்டபடி தொடங்கும்

திட்டமிட்டபடி தொடங்கும்

இதன் ஷூட்டிங் டிசம்பர் மாதம் சத்யமங்கலம் காடுகளில் தொடங்குகிறது. ஒரே கட்டமாக, படப்பிடிப்பை முடிக்க முடிவு செய்துள்ளனர். இதை முடித்துவிட்டு, வாடிவாசலை அவர் தொடங்குவார் எனத் தெரிகிறது. வாடிவாசல் படம் டிராப் என்று வந்த செய்தியை சமீபத்தில் மறுத்திருந்த தயாரிப்பாளர் தாணு, அது திட்டமிட்டபடி தொடங்கும் என்றும் கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X