வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்'.. ஷூட்டிங் எப்போது? வெளியானது அடுத்த அப்டேட்!

By

சென்னை: சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன் இப்போது, சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற கதையை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்குகிறார்.

சத்யமங்கலம் காடு

சத்யமங்கலம் காடு

இதில், நடிகர் சூரி போலீஸ்காரராகவும், பாரதிராஜா புரட்சியாளராகவும் முதலில் நடிப்பதாக இருந்தது. இதன் ஷூட்டிங் சத்யமங்கலம் காடுகளில் தொடங்கியது. ஒரே கட்டமாக, படப்பிடிப்பை முடிக்க முடிவு செய்திருந்தனர். ஆனால், கடும் குளிர் காரணமாக, படத்தில் இருந்து பாரதிராஜா விலகினார்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இதையடுத்து கிஷோர் நடிப்பதாகக் கூறப்பட்டது. அவராலும் அதில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்தப் படத்தின் சூரி ஜோடியாக, பவானி ஶ்ரீ ஒப்பந்தமாகி இருக்கிறார்.

வாடிவாசல்

வாடிவாசல்

இந்தப் படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்குகிறார் வெற்றிமாறன். சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை மையமாகக் கொண்டு உருவாகும் படம் இது . கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது என்பது பற்றி, தெரியவந்துள்ளது.

ஜூலையில் ஷூட்டிங்

ஜூலையில் ஷூட்டிங்

இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜூலை மாதம் தொடங்க இருக்கிறது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதில் நடிகர் சூர்யா, இரண்டு வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. நடிகர் சூர்யா இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X