வெப் சீரிஸ்ஸாக உருவாகிறதா வடசென்னை 2? ரன்னிங் டைம் பார்த்து வெற்றிமாறன் எடுத்த முடிவு?

சென்னை: வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.

விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

விடுதலையை தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன்.

இந்நிலையில், ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ள வட சென்னை 2, வெப் சீரிஸ்ஸாக உருவாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

 வெற்றிமாறனின் விடுதலை

வெற்றிமாறனின் விடுதலை

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வரும் வெற்றிமாறன், தற்போது விடுதலை படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, சூரி, கெளதம் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள விடுதலை படத்தின் ட்ரெலர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்னர் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விடுதலை படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

 வட சென்னை 2 அப்டேட்

வட சென்னை 2 அப்டேட்

விடுதலை முதல் பாகத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இதுவரை அறிவிக்கவில்லை. இதுவரை கிடைத்த தகவலின் படி, ஏப்ரல் முதல் வாரம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து விடுதலை 2 செப்டம்பரில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் ஷூட்டிங்கை தொடங்கவுள்ளார் வெற்றிமாறன். வாடிவாசல் ரிலீஸானதும் தான் வட சென்னை 2 படப்பிடிப்பு பற்றி தெரியவரும் என சொல்லப்படுகிறது.

 வெப் சீரிஸாக உருவாகிறது

வெப் சீரிஸாக உருவாகிறது

தனுஷ், அமீர், சமுத்திரகனி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான வட சென்னை, மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். சமீபத்தில் வட சென்னை குறித்து பேசியிருந்த சந்தோஷ் நாராயணன், படத்தின் மொத்தம் நீளம் 5 மணி நேரம் வரை இருந்தது. ஆனாலும், ஒவ்வொரு காட்சியையும் வெற்றிமாறன் நேர்த்தியாக எடுத்திருந்ததாகக் கூறியிருந்தார். அதனால் வட சென்னை 2 வெப் சீரிஸாக உருவாகலாம் என சொல்லப்படுகிறது.

 வெற்றிமாறனின் கனவு

வெற்றிமாறனின் கனவு

கடந்தாண்டு தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் பேட்டைக்காளி வெப் சீரிஸை தயாரித்திருந்தார் வெற்றிமாறன். அடுத்ததாக அற்புதம்மாளின் வாழ்க்கை வரலாற்றையும் வெப் சீரிஸ்ஸாக எடுக்க வேண்டும் என்பதே அவரது கனவாக உள்ளது. இந்த வெப் சீரிஸையும் வெற்றிமாறன் தயாரிக்கவுள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதுமட்டும் இல்லாமல் அவரே ஒரு வெப் சீரிஸை இயக்க வேண்டும் என திட்டமிட்டு வருகிறார். இதுதான் வட சென்னை இரண்டாம் பாகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 தனுஷ் ஓக்கே சொல்வாரா?

தனுஷ் ஓக்கே சொல்வாரா?

வட சென்னை 2 தனுஷின் அன்பு கேரக்டரை பின்னணியாக கொண்டு உருவாகவுள்ளது. அதனால், இதனை வெப் சீரிஸ்ஸாக எடுத்தால் தனுஷ் சம்மதம் சொல்வாரா என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. ஆனால், வெற்றிமாறனுக்காக அவர் மீதுள்ள நம்பிக்கையில் கண்டிப்பாக ஓக்கே சொல்லிவிடுவார் என்றே தெரிகிறது. திரைப்படமாக உருவான வட சென்னை முதல் பாகமே 5 மணி நேரம் ரன்னிங் டைம் இருந்தது. இப்போது இரண்டாம் பாகம் வெப் சீரிஸாக உருவானால் வெற்றிமாறனின் மேக்கிங் பற்றி கேட்கவே வேண்டாம் என்கின்றனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X