இறுதிக்கட்ட பரபரப்பில் வெற்றிமாறனின் விடுதலை... ஸ்பாட்டில் இருந்து விஜய் சேதுபதி கொடுத்த அப்டேட்

சென்னை: வெற்றிமாறன் இயக்கும் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.

விஜய் சேதுபதி, சூரி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.

இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், முதல் பாகத்தின் இறுதிக்கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாக விஜய் சேதுபதி ஸ்பாட்டில் ஆஜராகி அப்டேட் கொடுத்துள்ளார்.

இரண்டு பாகங்களாக விடுதலை

இரண்டு பாகங்களாக விடுதலை

கோலிவுட்டின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன், தற்போது விடுதலை படத்தை முடித்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள விடுதலை படத்தில், விஜய் சேதுபதி, சூரி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், ரஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதையை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் முதன்முறையாக வெற்றிமாறன் படத்துக்கு இளையராஜா இசையமைப்பதும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படப்பிடிப்பு நிறைவு

படப்பிடிப்பு நிறைவு

விடுதலை படப்பிடிப்பை பல மாதங்களாக நடத்தி வந்த வெற்றிமாறன், சமீபத்தில் தான் அதற்கு என்ட் கார்டு போட்டார். விடுதலை ஷூட்டிங் தாமதமாக விஜய் சேதுபதியின் கால்ஷீட் தான் பிரச்சினை என செய்திகள் வெளியாகின. ஆனால், இது சுத்தமான பொய் என வெற்றிமாறன் விளக்கம் கொடுத்து இருந்தார். இந்நிலையில், திண்டுக்கல், கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் நடந்து வந்த விடுதலை படத்தின் இரண்டு பாகங்களுக்கான படப்பிடிப்பும் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் பிஸியாகிவிட்டார் வெற்றிமாறன்.

டப்பிங் பணிகள் ஆரம்பம்

டப்பிங் பணிகள் ஆரம்பம்

இதனிடையே விடுதலை முதல் பாகத்திற்கான டப்பிங் வேலைகளும் பரபரப்பாக தொடங்கியது. பூஜையுடன் தொடங்கிய டப்பிங் பணியில் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்ளிட்ட விடுதலை படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்களை தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார் விஜய் சேதுபதி. இதனால் ரசிகர்கள் அதீத உற்சாகத்தில் உள்ளனர். முன்னதாக இந்தப் படம் ஜனவரி 26ம் தேதி ரிலீஸாகும் என செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விரைவில் ரிலீஸ் தேதி

விரைவில் ரிலீஸ் தேதி

ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விடுதலை படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டதால் விரைவில் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிமாறன், விஜய் சேதுபதி, இளையராஜா என முற்றிலும் புதிய கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படம் கண்டிப்பாக புதிய அதிர்வலைகளை உருவாக்கும் என சினிமா ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், விஜய் சேதுபதி ஷேர் செய்த விடுதலை டப்பிங் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X