விடுதலை படத்துக்கு என்ட் கார்டு போட்ட வெற்றிமாறன்… அப்போ ரிலீஸ் தேதி எப்போன்னு அப்டேட் கிடையாதா?

சென்னை: வெற்றிமாறன் இயக்கும் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.

விஜய் சேதுபதி, சூரி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கும் விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

விடுதலை ஷுட்டிங் வேகமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்தப் படத்துக்கு வெற்றிமாறன் என்ட் கார்டு போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெற்றிமாறனின் விடுதலை

வெற்றிமாறனின் விடுதலை

தமிழ்த் திரையுலகின் முக்கியமான இயக்குநரான வெற்றிமாறன், விடுதலை படத்தை இயக்கி வந்தார். விஜய் சேதுபதி, சூரி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், ராஜீவ் மேனன் நடிப்பில் உருவாகும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதையை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே விடுதலை படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் வாங்கியது.

முதன்முறையாக இளையராஜாவுடன் கூட்டணி

முதன்முறையாக இளையராஜாவுடன் கூட்டணி

வெற்றிமாறன் எப்போதுமே ஜிவி பிரகாஷுடன் மட்டுமே கூட்டணி வைப்பது வழக்கம். ஆனால், வடசென்னை படத்தில் தனுஷின் விருப்பத்திற்காக சந்தோஷ் நாராயணனுடன் இணைந்தார் வெற்றிமாறன். அந்த நேரத்தில் ஜிவி பிரகாஷுக்கும் தனுஷுக்கும் இடையே ஏதோ மனவருத்தம் இருந்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில், தற்போது விடுதலை படத்திற்காக முதன்முறையாக இளையராஜாவுடன் கூட்டணி வைத்துள்ளார் வெற்றிமாறன். விடுதலை படத்திற்காக இளையராஜா இசையில் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் விடுதலை படப்பிடிப்பை பல மாதங்களாக நடத்தி வந்த வெற்றிமாறன் இப்போது என்ட் கார்டு போட்டுள்ளாராம்.

விஜய் சேதுபதிக்கு விடுதலை

விஜய் சேதுபதிக்கு விடுதலை

விடுதலை படத்தின் ஷூட்டிங் தாமதமாவதற்கு விஜய் சேதுபதியின் கால்ஷீட் தான் பிரச்சினை என செய்திகள் வெளியாகின. ஆனால், இயக்குநர் வெற்றிமாறன் இது சுத்தமான பொய் என ஒரு பேட்டியில் விளக்கம் கொடுத்து இருந்தார். இந்நிலையில், விடுதலை படத்தின் இரண்டு பாகங்களுக்கான படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளதாம். அதேவேகத்தில் போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகளை தொடங்கிவிட்டாராம் வெற்றிமாறன். இதனால் விடுதலை முதல் பாகம் ஜனவரி 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளையராஜாவின் இசை விருந்து

இளையராஜாவின் இசை விருந்து

இந்நிலையில், விடுதலை ஆடியோ வெளியீட்டு விழாவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விடுதலை ஆடியோ வெளியீட்டு விழா ஜனவரி 17ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. விடுதலை படத்தின் பாடல்களுடன், இளையராஜாவின் மற்ற ஹிட் பாடல்களும் அந்த மேடையில் இசைக்கப்பட உள்ளதாம். விடுதலை ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி, சூரி உட்பட விடுதலை படக்குழுவினருடன் தனுஷ், சிவகார்த்திகேயன் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X