விடுதலை ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் காத்திருக்கும் மேஜிக்... வெற்றிமாறனின் சீக்ரெட் சர்ப்ரைஸ்
சென்னை: வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.
விஜய் சேதுபதி, சூரி, கெளதம் மேனன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் மார்ச் 31ம் தேதி வெளியாகிறது.
இளையராஜா இசையில் விடுதலை படத்தின் முதல் பாடல் கடந்த 8ம் தேதி வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், விடுதலை முதல் பாகத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடுதலை முதல் பாகம்
அசுரன் படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகம் மார்ச் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விடுதலை படத்தில், விஜய் சேதுபதி, சூரி, கெளதம் மேனன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். திண்டுக்கல் மலை பகுதியான சிறுமலை, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் விடுதலை ஷூட்டிங் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ட்ரெய்லர் வெளியீட்டு விழா
விடுதலை படத்தில் இருந்து 'உன்னோட நடந்தா' என்ற முதல் பாடல், கடந்த 8ம் தேதி வெளியானது. இளையராஜா இசையில் தனுஷ், அநன்யா பட் பாடியிருந்த இப்பாடலை சுகா எழுதியிருந்தார். இளையராஜாவின் ரம்மியமான இசையில் மெலடியாக உருவாகியுள்ள இந்தப் பாடல், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து விரைவில் விடுதலை படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது.

இளையராஜாவின் இசை நிகழ்ச்சி
விடுதலை படத்தின் முதல் பாகத்திற்கான ட்ரெய்லர் வெளியீட்டு விழா, மார்ச் 8ம் தேதி நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கியமாக இந்த விழாவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விடுதலை பட ட்ரெய்லருடன், பாடல்களும் வெளியிடப்படும் என தெரிகிறது. மேலும், விடுதலை பட பாடல்கள் மட்டும் இல்லாமல், இளையராஜா இசையில் வெளியான மற்ற படங்களில் இருந்தும் பாடல்கள் பாடப்படும் எனக் கூறப்படுகிறது.

ரெட் ஜெயன்ட் ரிலீஸ்
விடுதலை படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கான அறிவிப்பு விரைவில் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என இதுவரை தெரியவில்லை. விடுதலை திரைப்படம் ரிலீஸானதும் வாடிவாசல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விடுதலை இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதியையும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட்ஸ் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











