கான்ஸ்டபிலாக சூரி… கைதியாக விஜய்சேதுபதி… வெளியானது ‘விடுதலை‘ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !

சென்னை : சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இந்த போஸ்டரை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.

அந்த போஸ்டரில், சூரி போலீஸ் அதிகாரியாகவும், விஜய் சேதுபதி கைதி போன்றும் உள்ளனர்.

சூரி கதாநாயகனாக

சூரி கதாநாயகனாக

தனுஷின் அசுரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிவரும் திரைப்படம் விடுதலை. இதுநாள் வரை நகைச்சுவை மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி இந்த படத்தின் மூலம் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார்.

முக்கிய கதாபாத்திரத்தில்

முக்கிய கதாபாத்திரத்தில்

விடுதலை என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைதுள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்தை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார்.

கதாநாயகனாக சூரி

கதாநாயகனாக சூரி

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. அதில்,வாத்தியாராக விஜய்சேதுதி.. கதாநாயகனாக சூரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சூரி கான்ஸ்டபில் கெட்டப்பிலும், விஜய்சேதுபதி கைதி கெட்டப்பிலும் உள்ளனர். இதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Recommended Video

Free Film Course For Lower cast students| Vetrimaaran speech | Filmibeat Tamil
துணைவன் கதை

துணைவன் கதை

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் கதையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பல காட்சிகள் சத்தியமங்கலம் அடர்ந்த காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. இயக்குனர் வெற்றிமாறன் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X